டெல்லி: மத்திய அரசின் மூன்று வேளாண் சட்டங்களை ரத்து செய்யக்கோரி நாடு முழுவதிலும் உள்ள விவசாயிகள் டெல்லியை இணைக்கும் எல்லையோர நெடுஞ்சாலைகளில் கடந்த நவம்பர் 26ஆம் தேதி முதல் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இவர்களை தடுக்கும் பொருட்டு உத்தரப் பிரதேசம்- டெல்லி தேசிய நெடுஞ்சாலையான காசிப்பூர் எல்லையில் காவல்துறையினர் தடுப்புகளை வைத்தனர். இதனை விவசாயிகள் அகற்ற முற்பட்டதால், கடந்த டிசம்பர் 3ஆம் தேதி முதல் இந்த சாலையில் போக்குவரத்து முற்றிலுமாக முடக்கப்பட்டது.
டெல்லியில் இருந்து காஜியாபாத் நோக்கிச் செல்லும் தேசிய நெடுஞ்சாலையை திறப்பது தொடர்பாக காஜியாபாத் மாவட்ட காவல்துறையினரும், டெல்லி காவல்துறையினரும் கலந்துரையாடிய பிறகு சாலையை மக்கள் பயன்பாட்டிற்கு திறப்பது என முடிவெடுக்கப்பட்டது. இன்று முதல் தேசிய தலைநகரிலிருந்து உத்தரபிரதேசத்திற்கு செல்பவர்களுக்கு மட்டும் இந்தச் சேவை நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: டெல்லியில் 48 மணிநேரத்தில் நிகழ்ந்த 3 துப்பாக்கிச் சூடு சம்பவம்