மத்தியப் பிரதேசம், இமாச்சல பிரதேசம் உள்ளிட்ட சில மாநிலங்களில் இடைத்தேர்தல் வரும் அக்டோபர் 30ஆம் தேதி நடைபெறவுள்ளது. இதற்கான வேட்பாளர் பட்டியலை அரசியல் கட்சிகள் அறிவித்துவருகின்றன.
இந்த இடைத்தேர்தல் வேட்பாளர் பட்டியல் பெயரில் பிரபல பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத் பெயரும் இடம் பெற்றுள்ளதாக போலிச் செய்தி இணையத்தில் பரவிவருகிறது.
இமாச்சலப் பிரதேசத்தின் மண்டி மக்களவைத் தொகுதியில் அவர் பாஜக வேட்பாளராக களமிறங்கவுள்ளதாக போலி அறிக்கை ஒன்று இணையத்தில் உலாவருகிறது. ஆனால், உண்மையில் இந்தத் தொகுதியில் குஷல் தாக்கூர் என்பவரை பாஜக வேட்பாளராக களமிறக்குகிறது. முன்னாள் ராணுவ பிரிகேடியரான தாக்கூர் கார்கில் போரில் இந்திய ராணுவம் சார்பாக முக்கிய பங்காற்றியுள்ளார்.
இவரை எதிர்த்து காங்கிரஸ் சார்பில் முன்னாள் முதலமைச்சரான விர்பத்திர சிங்கின் மனைவி பிரதிபா சிங் போட்டியிடுகிறார்.
நடிகை கங்கனா ரனாவத் நீண்டகாலமாக வலதுசாரி, பாஜக ஆதரவு கருத்துக்களை நேரடியாகத் தெரிவித்துவருபவர். எனவே தான், அவரை வைத்து இவ்வாறு பரப்பப்படும் போலி செய்தி பேசுபொருளாக மாறியுள்ளது.
இதையும் படிங்க: நாடு முழுவதும் பிஎஸ்ஏ ஆக்சிஜன் உற்பத்தி ஆலைகளைத் தொடங்கிவைத்த பிரதமர்