சண்டிகர்: 64ஆவது தேசிய துப்பாக்கிச்சுடுதல் சாம்பியன்ஷிப் தொடர் சமீபத்தில் நடைபெற்றது. இத்தொடரில், 17 வயதான துப்பாக்கிச்சுடுதல் வீராங்கனை குஷ் சீரத் கவுர் சந்து பங்கேற்றுள்ளார்.
இதில், அவர் தனது திறனை முழுமையாக வெளிக்காட்டவில்லை என்ற விரக்தியில் இருந்துள்ளார். இந்நிலையில், அனுமதி பெற்ற தனது துப்பாக்கியைக் கொண்டு கவுர் கடந்த வியாழக்கிழமை (டிசம்பர் 9) தற்கொலை செய்துகொண்டார்.
இது குறித்து, ஃபரித்கோட் காவல் துறையினர் கூறியதாவது, "ஒரு சிறுமி சுட்டுத் தற்கொலை செய்துகொண்டதாக ஃபரித்கோட் காவல் கட்டுப்பாட்டு அறைக்குத் தகவல் வந்தது. உடனே சம்பவ இடத்திற்கு விரைந்து அந்தச் சிறுமியின் உடலைக் கைப்பற்றினர்.
அந்தச் சிறுமி துப்பாக்கியால் சுட்டு உயிரிழந்துள்ளார். அவரின் உடலில் குண்டுபாய்ந்த காயம் தென்படுகிறது. உடற்கூராய்வுக்குப் பிறகு உடல் அவரின் குடும்பத்திடம் ஒப்படைக்கப்பட்டது. வழக்குப்பதிவு செய்யப்பட்டு முதற்கட்ட விசாரணை நடைபெற்றுவருகிறது" என்றனர்.
மறைந்த குஷ் சீரத் கவுர், துப்பாக்கிச்சுடுதல் தொடரில் தனிப்பிரிவில் பதக்கம் பெறவில்லை எனவும் ஜுனியர் அணிப்பிரிவில் ஒரு பதக்கம் பெற்றார்.
இதையும் படிங்க: Ashes Gabba Test: வீழ்ந்தது இங்கிலாந்து; காபாவில் மீண்டும் கொடி நட்டியது ஆஸி.,