டெல்லி: மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர், இந்த மாத தொடக்கத்தில் ஆசியான் நாடுகளின் கூட்டுக்குழு கூட்டங்கள், மீகாங் கங்கா ஒத்துழைப்பு (MGC) மாநாடு மற்றும் வங்காள விரிகுடா பல துறை தொழில்நுட்ப மற்றும் பொருளாதார ஒத்துழைப்புக்கான முன்முயற்சி (BIMSTEC) உள்ளிட்டவைகளில் பங்கேற்கும் பொருட்டு, இந்தோனேசிய தலைநகர் ஜகார்த்தா மற்றும் தாய்லாந்து தலைநகர் பாங்காங்கிற்கு சென்றார். அங்கு, அமைச்சர் ஜெய்சங்கர் ராணுவ ஆட்சியின் கீழ் மியான்மர் நாட்டின் நிலைமை குறித்து எடுத்துரைத்தார்.
இந்தியாவிற்கு எல்லையோர நாடாக மியான்மர் இருப்பதால், மணிப்பூரில் நடந்து வரும் இனக்கலவரத்தை கருத்தில் கொண்டு, மியான்மரின் நிலைமை டெல்லிக்கு மிகவும் கவலையளிப்பதாக அவர் குறிப்பிட்டு இருந்தார்.
ASEAN கூட்டத்தில், அமைச்சர் ஜெய்சங்கர் மியான்மர் உடன் "எங்கள் எல்லைப் பகுதிகளில் நிலைத்தன்மை மற்றும் பாதுகாப்பு" குறித்த பிரச்னையை எழுப்பினார். பாங்காக்கில் MGC கூட்டத்தின் ஒரு பகுதியாக, அமைச்சர் ஜெய்சங்கர் மியான்மர் நாட்டைச் சேர்ந்த யூ தான் ஸ்வேவையும் சந்தித்துப் பேசினார்.
மணிப்பூரில் நடைபெற்று வருவது ஒரு இன மோதல் என்பதைக் காட்டிலும், மணிப்பூரில் நிலைமை புவிசார் அரசியல் மாற்றங்களைக் கொண்டுள்ளதாக உள்ளது. மணிப்பூர் அனைத்து பழங்குடி மாணவர் சங்கம் (ATSUM), கடந்த மே 3ஆம் தேதி சூராசந்த்பூரில் ஒரு அமைதிப் பேரணியை நடத்தியது.
இதன்பிறகு தான், நாட்டின் வடகிழக்குப்பகுதியில் மிகப்பெரிய அளவிலான இன மோதல் வெடித்தது. இரண்டு பெண்களை நிர்வாணமாக அழைத்துச் சென்றவீடியோ வெளியாகி வைரலான நிலையில், அது ஒட்டுமொத்த மக்களின் மனசாட்சியை உலுக்கும் வகையில் அமைந்தது.
355வது சட்டப்பிரிவு : மணிப்பூர் மாநிலம் இம்பால் பள்ளத்தாக்கில் மெய்தி இன மக்களுக்கும் மலைகளில் வசிக்கும் குக்கி மக்களுக்கும் இடையே வெடித்த இன மோதலைத் தொடர்ந்து மணிப்பூரில் 355வது பிரிவை வெளியிடுவது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் இல்லை என்றாலும், கீழ்க்கானும் விதிகள் பயன்படுத்தப்பட உள்ளன.
355வது சட்டப்பிரிவு என்பது இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் XVIIIவது பிரிவில், 352 முதல் 360 வரை உள்ள அவசரகால விதிகளின் ஒரு பகுதியாகும். "உள் குழப்பங்கள் மற்றும் வெளிப்புற ஆக்கிரமிப்புகளுக்கு" எதிராக ஒரு மாநிலத்தைப் பாதுகாக்க தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்க மத்திய அரசுக்கு அதிகாரம் அளிக்கிறது.
வெளிப்புற ஆக்கிரமிப்பு: மணிப்பூர் மாநிலத்தில் வெளிப்புற ஆக்கிரமிப்பு என்பது, மியான்மர் நாட்டுடன் தொடர்பு உடையது. மணிப்பூர் மாநிலம் மியான்மருடன் 398 கிலோ மீட்டர் நீள எல்லையைப் பகிர்ந்து கொள்கிறது. இது சட்டவிரோத போதைப்பொருள் வர்த்தகத்தை செயல்படுத்தும் நுண்ணிய எல்லைப்பகுதி ஆகும்.
சட்டவிரோத போதைப்பொருள் வர்த்தகத்தை கட்டுப்படுத்த மணிப்பூர் அரசு, ‘போதைக்கு எதிரான போர்’ நடவடிக்கையை சமீபத்தில் அறிவித்தது. மியான்மர், லாவோஸ் மற்றும் தாய்லாந்து ஆகிய நாடுகளின் போதைப்பொருள் கடத்தல் கும்பலை உள்ளடக்கிய தங்க முக்கோணத்திற்கு எதிராக இந்தப் போர் அறிவிக்கப்பட்டது. இந்த கும்பல் மணிப்பூரை போதைப்பொருளின் ஆதாரமாக மாற்றி உள்ளனர்.
பாப்பி சாகுபடி: கடந்த ஐந்து ஆண்டுகளில், மணிப்பூரில் பாப்பி சாகுபடி, மலைக் கிராமங்களில் 15,400 ஏக்கர் நிலப்பரப்பில் பரவி உள்ளது. இந்த ஆண்டு மே மாதம் மணிப்பூர் உள்துறை ஆணையருக்கு எழுதிய கடிதத்தில், இந்த காலகட்டத்தில் போதைப்பொருள் மற்றும் மனநோய் பொருள்கள் (NDPS) சட்டத்தின் கீழ் 2,518 பேர் கைது செய்யப்பட்டு உள்ளதாக காவல் துறை கண்காணிப்பாளர் (NAB) கே.மேஹச்சந்திர சிங் தெரிவித்து உள்ளார்.
ஆயுதமேந்திய இன அமைப்புகள்: மணிப்பூரில் ஏற்பட்டுள்ள நெருக்கடிக்கு போதைப்பொருளை விட, மியான்மரின் நிலைமைதான் காரணம் என்பது, டெல்லியை கவலையடைய வைத்து உள்ளது. 2021ஆம் ஆண்டில் மியான்மர் நாட்டில் நிகழ்ந்த ஆட்சி கவிழ்ப்பைத் தொடர்ந்து, 2020ஆம் ஆண்டு தேர்தலில் தேர்ந்தெடுக்கப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழுவினர், தேசிய ஒற்றுமை அரசாங்கத்தை (NUG) அமைத்தனர்.
ஆளும் ராணுவ ஆட்சிக்குழுவின் மாநில நிர்வாக கவுன்சில் (SAC), இந்த தேசிய ஒற்றுமை அரசாங்கத்தை சட்ட விரோதமானது மற்றும் பயங்கரவாத அமைப்பாக அறிவித்தது. தேசிய ஒற்றுமை அரசாங்கம் பின்னர், மே மாதம் மக்கள் பாதுகாப்புப் படை (PDF) நிறுவப்படுவதாக அறிவித்தது மற்றும் ராணுவ அரசாங்கத்திற்கு எதிராக மியான்மர் நாடு முழுவதிலும் சிறிய அளவில் இயங்கும் ஒழுங்கமைக்கப்பட்ட உள்ளூர் இன ஆயுத அமைப்புகளுடன் இணைந்து "மக்கள் தற்காப்பு போரையும்" அறிவித்தது.
சின்-குகிஸ்: மியான்மர் நாட்டில், பெரும்பான்மை இனமாக பாமர்கள் உள்ளனர். ஆனால், பிற இன சிறுபான்மையினரும் அந்நாட்டின் ஏழு மாநிலங்களில் வசித்து வருகின்றனர். இதில் சின், கச்சின், கரேன், கயா, மோன், ரக்கைன் மற்றும் ஷான் இன மக்கள் அடங்குவர். மியான்மரில் சின்கள் என்று அழைக்கப்படும் மக்கள் இந்தியாவில் குக்கிகள் என்று அழைக்கப்படுகிறார்கள். குக்கிகள் என்பது வடகிழக்கு மாநிலங்களான மணிப்பூர், மிசோரம் மற்றும் அஸ்ஸாம் மற்றும் சில்ஹெட் மாவட்டத்தின் சில பகுதிகள் மற்றும் வங்கதேச நாட்டின் சிட்டகாங் மலைப்பகுதிகளில் வசிக்கும் பல பழங்குடியினரின் இனக்குழு ஆகும். சின்-குகி குழுவில் காங்டே, ஹமர், பைட், தாடூ, வைபேய், ஜூ, ஐமோல், சிரு, கொய்ரெங் உள்ளிட்ட பலர் உள்ளனர்.
இந்தியாவின் குக்கிகள் மியான்மரின் சின்களை ஒரு சகோதர பழங்குடியாக பார்க்கின்றனர். இந்திய அரசின் விதிமுறைகளின்படி, எல்லை தாண்டிய ஊடுருவல் அனுமதிக்கப்படவில்லை என்றாலும், மியான்மரின் சின்-குகிகள் சிறிய எல்லையைத் தாண்டி வரும்போது ஒரு தரப்பு மக்களால் ஏற்றுக் கொள்ளப்படுகிறார்கள்.
செயல்பாடுகள் இடைநிறுத்தம்: இந்த நிகழ்வு மியான்மரின் EAOக்களை இந்தியாவுக்குள் ஊடுருவச் செய்ததாக, ஈடிவி பாரத் செய்திகளிடம் நம்பத்தகுந்த ஆதாரம் தகவல் தெரிவித்து உள்ளது. ஆயுதங்களுடன் கூடிய இந்த EAOக்கள் இப்போது மணிப்பூரின் மலைப்பகுதிகளில் செயல்படத் தொடங்கி உள்ளனர்.
இருப்பினும், மணிப்பூரில் உள்ள 25 குகி கிளர்ச்சிக் குழுக்கள், டெல்லியில் இடைநிறுத்த நடவடிக்கை (SoO) ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டு உள்ளதால், இந்திய பாதுகாப்புப் படைகள் இத்தகைய பயங்கரவாதிகளை கையாள்வதில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும் என்று அந்த வட்டாரம் எச்சரித்து உள்ளது.
பர்மா சட்டம்: EAOக்கள் தைரியமடைந்ததற்கு மற்றொரு காரணமாக, கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் அமெரிக்க பிரதிநிதிகள் சபையில் நிறைவேற்றப்பட்ட மசோதாவும் அறியப்படுகிறது. அமெரிக்க பிரதிநிதிகள் சபை 2021ஆம் ஆண்டின் கடுமையான ராணுவ பொறுப்புக்கூறல் சட்டம் அல்லது பர்மா சட்டம் மூலம் ஒருங்கிணைக்கப்பட்ட பர்மாவை நிறைவேற்றியது. இதனை சர்வதேச கிறிஸ்தவ உரிமைகள் குழு வரவேற்று உள்ளது குறிப்பிடத்தக்கது.
-
Today, @RepGregoryMeeks introduced the “Burma Unified through Rigorous Military Accountability Act of 2021” or BURMA Act with @RepSteveChabot & @SenatorCardin to support & protect the Burmese people and send a clear signal to the Burmese military.
— House Foreign Affairs Committee Dems (@HouseForeign) October 5, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data="
The bill: pic.twitter.com/n4CsNU4pP4
">Today, @RepGregoryMeeks introduced the “Burma Unified through Rigorous Military Accountability Act of 2021” or BURMA Act with @RepSteveChabot & @SenatorCardin to support & protect the Burmese people and send a clear signal to the Burmese military.
— House Foreign Affairs Committee Dems (@HouseForeign) October 5, 2021
The bill: pic.twitter.com/n4CsNU4pP4Today, @RepGregoryMeeks introduced the “Burma Unified through Rigorous Military Accountability Act of 2021” or BURMA Act with @RepSteveChabot & @SenatorCardin to support & protect the Burmese people and send a clear signal to the Burmese military.
— House Foreign Affairs Committee Dems (@HouseForeign) October 5, 2021
The bill: pic.twitter.com/n4CsNU4pP4
"மியான்மரில் வாழும் பல மத சிறுபான்மையினருக்கும், தற்போது வன்முறையால் இடம் பெயர்ந்தவர்களுக்கும் இந்த மசோதா மிகவும் முக்கியமானது" என சர்வதேச கிறிஸ்தவ அக்கறை (ICC) தெரிவித்து உள்ளது. மியான்மரில் மோதல்கள் நாட்டின் மதக் குழுக்கள் மீதான நேரடித் தாக்குதலாகத் தொடங்கவில்லை என்றாலும், "அது நாட்டின் கிறிஸ்தவ சமூகங்களுக்கு குறிப்பிடத்தக்க தீங்கு விளைவித்து உள்ளது" என்று அந்த அமைப்பு தெரிவித்து உள்ளது.
-
The U.S. recently passed the Burma Act to supports democracy in Myanmar. Our @YeMyoHein5 suggests ways in which the Biden administration can fulfill the promise of the act in a new analysis for @Diplomat_APAC:https://t.co/n87fM4axDd
— U.S. Institute of Peace (@USIP) February 7, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data="
">The U.S. recently passed the Burma Act to supports democracy in Myanmar. Our @YeMyoHein5 suggests ways in which the Biden administration can fulfill the promise of the act in a new analysis for @Diplomat_APAC:https://t.co/n87fM4axDd
— U.S. Institute of Peace (@USIP) February 7, 2023The U.S. recently passed the Burma Act to supports democracy in Myanmar. Our @YeMyoHein5 suggests ways in which the Biden administration can fulfill the promise of the act in a new analysis for @Diplomat_APAC:https://t.co/n87fM4axDd
— U.S. Institute of Peace (@USIP) February 7, 2023
ஜனநாயக சார்பு இயக்கத்தை உடைக்கும் ராணுவ ஆட்சிக் குழுவின் முயற்சியில், அவர்கள் நாட்டின் கிறிஸ்தவ மற்றும் பெளத்தர்கள் அல்லாத மக்களைக் கொண்ட ஆட்சிக் குழுவின் சட்டவிரோத உரிமைக் கோரிக்கையை எதிர்த்த நாட்டின் இன சிறுபான்மை குழுக்களைத் தொடர்ந்து குறி வைக்கின்றனர் என்று அந்த அமைப்பு வெளியிட்டு உள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டு உள்ளது.
அமெரிக்க மசோதா சட்டமாக நிறைவேறினால், ஐந்து ஆண்டுகளில் மியான்மரில் ஜனநாயக ஆதரவு இயக்கத்திற்கு 450 மில்லியன் டாலர் மனிதாபிமான உதவி மற்றும் ஆதரவை அளிக்கும். பார்வையாளர்களின் கூற்றுப்படி, இந்த மசோதா மியான்மரில் சீனாவின் செல்வாக்கை எதிர்கொள்வதையும் நோக்கமாகக் கொண்டு உள்ளது. அதனால்தான் மணிப்பூரில் ஏற்பட்டுள்ள நெருக்கடி, இப்போது புவிசார் அரசியல் மாற்றங்களுடன் ஒரு பிரச்னையாக மாறி உள்ளது.