ETV Bharat / bharat

Exclusive: "தெலங்கானாவில் விரைவில் பாஜக ஆட்சி" - ரமேஷ் பொக்ரியால்

author img

By

Published : Jul 5, 2022, 9:30 AM IST

Updated : Jul 5, 2022, 1:37 PM IST

விரைவில் தெலங்கானா மாநிலத்தில் பாஜக ஆட்சி அமைக்கும் என்று முன்னாள் மத்திய அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் ஈடிவி பாரத்திற்கு அளித்த பிரத்யேக பேட்டியில் தெரிவித்தார்.

Exclusive:தெலங்கானாவில் பாஜக ஆட்சி அமைக்கும்-  முன்னாள் மத்திய அமைச்சர் ரமேஷ் பொக்ரியால்

ஹைதராபாத்: முன்னாள் மத்திய கல்வித் துறை அமைச்சரும், பாஜக மூத்த தலைவருமான ரமேஷ் பொக்ரியால் நிஷான்க் நேற்று (ஜூலை 4) ஹைதராபாத்தில் உள்ள ராமோஜி ராவ் ஃபிலிம் சிட்டியை பார்வையிட்டார். இதனைத் தொடர்ந்து ஈடிவி பாரத் அலுவலகத்திற்கு வந்து அனைத்து மாநில செய்தி ஆசிரியர்களிடமும் உரையாடினார். ஈடிவி பாரத் தமிழ் செய்திப் பிரிவினரை சந்தித்தார். பின்னர் ஈடிவி பாரத்திற்கு பிரத்யேக பேட்டி அளித்தார்.

தெலங்கானா மாநிலத்தின் முதலமைச்சரும் டி.ஆர்.எஸ் கட்சியின் தலைவருமான சந்திரசேகர் ராவ், மத்திய அரசு வேலை வாய்ப்பு கொள்கை குறித்த கூறிய அனைத்து விமர்சனங்களைக்கும் மறுப்பு தெரிவித்து பதிலளித்தார். தெலங்கானா மாநிலத்திற்கு ரூ. 3 லட்சம் கோடி கடன் இருக்கும் வேளையில், மாநிலம் வளர்ச்சிப் பாதையில் செல்வதாக பொய் கூறிவருகின்றனர் என்று சாடினார்.

இதையடுத்து செய்தியாளரின் கேள்விகளுக்கு பதிலளித்தார். அவை பின்வருமாறு.

Exclusive: "தெலங்கானாவில் விரைவில் பாஜக ஆட்சி" - ரமேஷ் பொக்ரியால்

கேள்வி: தெலங்கானா தனி மாநிலமாக பிரிந்ததில் இருந்து இதன் வளர்ச்சி குறித்து பாஜக தொடர்ந்து விமர்சனம் செய்துவருகிறது. அண்மையில் நடந்த கூட்டத்தில் என்னென்ன முடிவுகள் எடுக்கப்பட்டன.

பதில்: ஜார்கண்ட், உத்தரகாண்ட், சத்தீஸ்கர் போலவே பிரிக்கப்பட்ட தெலங்கானாவிலும் ஒரே மாதிரியான பிரச்சனையே நிலவுகிறது. தெலங்கானாவில் வேலைவாய்ப்பு மற்றும் மக்கள் உரிமைகள் சார்ந்த கோரிக்கைகள் நிறைவேறவில்லை. பாஜக தெலங்கானா மாநிலத்தின் வளர்ச்சிக்காக பல்வேறு திட்டங்களை வைத்துள்ளது. இங்குள்ள மக்களுடன் கலந்து பல கூட்டங்கள் நடத்தப்பட்டுள்ளன. தெலங்கானாவில் உள்ள மலைவாழ் மக்கள், பின் தங்கியவர்களுக்கு தேவையான உரிமைகள் வழங்கப்படவில்லை. மத்திய அரசின் திட்டங்களை பயன்படுத்தாமல் பின் தங்கியுள்ளது.

கேள்வி: தெலங்கானா முதலமைச்சர், பாஜகவிடமும் பிகார், உத்தரப் பிரதேசத்தில் உள்ள வேலைவாய்ப்பு திட்டங்கள் குறித்தும் கேள்வி எழுப்பியுள்ளார். உங்களின் பதில் என்ன?

பதில்: தெலங்கானா முதலமைச்சர் தனது சொந்த மாநிலத்திற்கும், அவர் கேள்வி எழுப்பிய மாநிலங்களுக்கும் இடையே உள்ள வித்தியாசங்களை புரிந்து கொள்ள வேண்டும். தெலங்கானா மாநில உரிமை போராட்டத்தின் போது அவர் அளித்த வேலைவாய்ப்பு வாக்குறுதியை இன்னும் அவர் நிறைவேற்றவில்லை. இந்த மாநிலத்தின் உட்கட்டமைப்பு, பொருளாதார நிலை மற்றும் முன்னேற்றம் என்று எதிலும் கவனம் செலுத்தவில்லை. ரூ.3 லடசம் கோடி கடனை மட்டுமே வைத்துள்ளார். இங்கு பிறக்கும் ஒரு குழந்தை கூட கடன் சுமையோடுதான் பிறக்கிறது.

கேள்வி: எதிர்கட்சிகளின் ஆட்சி நடக்கும் மாநிலங்கள், மத்திய அரசுக்கு எந்த ஆதரவையும் வழங்குவதில்லை என்று பாஜக தொடர்ந்து கேள்வி எழுப்பி வருகிறது. குறிப்பாக அக்னிபாத் திட்டம் குறித்தும், புதிய கல்விக் கொள்கை குறித்தும் கேள்வி எழுப்பியுள்ளன?

பதில்: இதைப் பற்றி கேள்வி எழுப்பும் மாநிலங்கள், இதுகுறித்து சரியான தகவல்களை தெரிந்து வைத்திருக்க வேண்டும். சரியாக ஆய்வு செய்ய வேண்டும். அக்னிபாத் திட்டம் என்பது நாட்டில் உள்ள இளைஞர்கள் மனதில் தேசபக்தியின் உணர்வை வளர்க்கும் முயற்சியாகும். அக்னிபாத் திட்டம் குறித்து கேள்வி எழுப்பிய எதிர்க்கட்சிகள், ஆளும் மாநிலங்களின் முதலமைச்சர்களிடம் நான் கேட்கிறேன், வேலையில்லாதவர்கள் தங்கள் மாநிலங்களில் என்ன செய்கிறார்கள் ?

கேள்வி: நான்கு ஆண்டுகள் கழித்து அக்னிபாத் திட்டத்தில் இருந்த அக்னி வீர்களின் நிலை என்னவாகும் என்று எதிர்க்கட்சி முதலமைச்சர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்?

பதில்: நாட்டின் மீது முழுமையாக தேசபக்தி உள்ள இளைஞர்களுக்கானதுதான் அக்னிபாத் திட்டம். நாட்டின் வளர்ச்சி இளைஞர்களின் எதிர்காலத்தில் உள்ளது. அக்னிவீர்கள், நான்கு ஆண்டுகள் கழித்து பல வேலைவாய்ப்புகளை பெறலாம். அவர்களுக்கு விருப்பமான துறையை தேர்ந்தெடுக்கலாம். ஏனென்றால் அனைத்து துறைகளிலும் இவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும். இதனை எதிர்க்கும் எதிர்கட்சிகள் புரிந்து கொள்ள வேண்டும். இது சில காலம் பின்னர் இளைஞர்கள் புரிந்து கொள்வார்கள். அப்போது அவர்களது மாநில அரசிடம், மத்திய அரசு எங்களுக்கு பயிற்சியும் அளித்து, வேலையும் அளித்துள்ளது நீங்கள் எங்களுக்கு என்ன செய்தீர்கள் என கேள்வி எழுப்புவார்கள்.

கேள்வி: தெலங்கானாவின் மூத்த அரசியல் தலைவர்கள், விவசாய சட்டத்தை விவசாயிகள் தெருவில் இறங்கி போராடிய பின்பு திரும்ப பெற்றது, இதே போல் நான்கு ஆண்டுகள் கழித்து இளைஞர்கள் போராடுவார்கள், அப்போது என்ன செய்ய முடியும்? என கேள்வி எழுப்பியுள்ளனர்.

பதில்: இந்த ஓராண்டு விவசாயிகள் சாலையில் நிற்காமல் வயலில் நின்றனர். அவர்கள் அதற்கான பலனை பெற்றனர். தற்போது நாட்டில் விவசாய உற்பத்தி அதிகரித்துள்ளது. விவசாயிகளின் பொருளாதார நிலை மேம்பட்டுள்ளது. இது மாதிரியான கேள்விகளை எழுப்புபவர்கள் விவசாயிகளின் நண்பர்கள் அல்ல. விவசாயிகளுக்கு அதிகாரம் அளிப்பதே பிரதமர் மோடியின் லட்சியம். இந்த சட்டங்கள் விவசாயிகளுக்கு அதிகாரம் அளிக்கும் வகையில் கொண்டு வரப்பட்டது. பிரதமர் மோடியின் செயல்பாடுகளால் இன்று நாடு முன்னேறியுள்ளது. நாட்டின் முன்னேறிய பகுதிகளில் எதிர்க்கட்சிகள் ஆட்சியில் இல்லை. பிரதமர் மோடியுடன் ஒப்பிடுகையில் அவை வெளுத்துப் போகின்றன. எதிர்க்கட்சிகளுக்கு விவசாயிகள் மீதும், இளைஞர்கள் மீதும் அக்கறை இல்லை. மத்திய அரசை எதிர்ப்புக்காகத்தான் போராட்டம் நடத்துகிறார்கள்.

கேள்வி: மத்தியப் பிரதேசம் மற்றும் மகாராஷ்டிராவில் ஆட்சி மாற்றம் மற்றும் ‘ஆபரேஷன் லோட்டஸ்’ குறித்து கேள்விகள் எழுப்பப்பட்டு வருகின்றன. உங்களின் பதில் என்ன?

பதில்: அனைத்து கட்சிகளும் அதனை விரிவு படுத்துவதையே விரும்புகிறது. பாஜக ஒவ்வொரு நாளும் வளர்ந்து வருகிறது. இன்று ஒட்டுமொத்த நாடும் பாஜகவை ஆதரிக்கிறது. மக்கள் வெளிவந்து எங்கள் குறிக்கோள்களுக்கு ஆதரவு அளித்து வருகின்றனர். தெலங்கானாவிலும் பாஜக விரைவில் ஆட்சி அமைக்கும்.

கேள்வி: புதிய கல்விக் கொள்கை குறித்து தொடர்ந்து கேள்வி எழுப்ப பட்டு வருகிறது. இந்த சர்ச்சையை நீங்கள் எப்படி பார்க்கிறீர்கள்?

பதில்: நான் கல்வி அமைச்சராக இருந்த காலத்தில் தேசிய கல்விக் கொள்கை குறித்து யாரும் கேள்வி எழுப்பவில்லை. என்ன கேள்விகள் எழுப்பப்பட்டாலும் நான் வெளிப்படையாக பதிலளித்தேன். அதன் பிறகு, அதன் மீதான சந்தேகங்கள் தீர்க்கப்பட்டன. உலகின் தலைசிறந்த பல்கலைக்கழகங்களான ஹார்வர்ட், கேம்பிரிட்ஜ், மற்றும் ஆக்ஸ்போர்டு என அனைத்துமே இந்தியாவின் புதிய கல்விக் கொள்கை முழு உலகையும் மாற்றும் வகையில் செயல்படும் என்று கூறியுள்ளன. எங்களின் புதிய கல்விக் கொள்கையே தரமான இந்தியா உருவாவதற்கு அடிப்படையாக இருக்கும். இக்கொள்கை அறிவு, அறிவியல், ஆராய்ச்சி மற்றும் தொழில்நுட்பம் ஆகியவற்றை அடிப்படையாக அமைந்துள்ளது. இந்த கொள்கையால், உலகிற்கே இந்தியா குருவாக மாறும். கல்விக் கொள்கையை நாட்டில் யாரும் எதிர்க்கவில்லை" என்றார்.

இதையும் படிங்க:'சுதந்திர போராட்டம் என்பது குறிப்பிட்ட சிலரின் வரலாறு இல்லை' - பிரதமர் மோடி!

Last Updated : Jul 5, 2022, 1:37 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.