டெல்லி: சர்வதேச நாணய நிதியத்தின், நியமனக் குழு நேற்று (ஆக. 26) அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில்," கிருஷ்ணமூர்த்தி சுப்ரமணியன் சர்வதேச நாணய நிதியத்தின் இந்திய நிர்வாக இயக்குநராக நியமிக்கப்படுகிறார்.
நவம்பர் 1ஆம் தேதியில் இருந்து இப்பொறுப்பை ஏற்கும் சுப்ரமணியனின் பதவிக்காலம் 3 ஆண்டுகள்" என குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், நியமனக் குழுவின் ஆலோசனையின் பேரில் அவரின் பதவிக்காலம் நீட்டிக்கப்படலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சுப்ரமணியன் தற்போது, இந்தியன் ஸ்கூல் ஆஃப் பிஸ்னஸ் நிறுவனத்தில் பேராசிரியராக பணியாற்றி வருகிறார். அவர், 2018ஆம் ஆண்டு முதல் 2021ஆம் ஆண்டுவரை தலைமை பொருளாதார ஆலோசகராக பொறுப்பு வகித்தார்.
தற்போது, இந்தியாவின் நிர்வாக இயக்குநராக இருக்கும் சுர்ஜித் பல்லாவின் பதவிக்காலம் வரும் அக். 31ஆம் தேதியுடன் நிறைவடையும் நிலையில், கிருஷ்ணமூர்த்தி சுப்ரமணியன் தற்போது புதிய நிர்வாக இயக்குநராக தேர்வு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: ராக்கெட்ரி சினிமாவில் இஸ்ரோ குறித்து தெரிவிக்கப்பட்டுள்ள 90% தகவல்கள் தவறானவை... எழுந்தது குற்றச்சாட்டு...