பெங்களூரு: கர்நாடகாவில் அடுத்து வரும் சட்டப்பேரவை தேர்தலில், முன்னாள் முதலமைச்சரும், எதிர்க்கட்சி தலைவருமான சித்தாரமையாவை முதலமைச்சராக முன்நிறுத்தும் நோக்கில், அவரது ஆதரவாளர்கள் பேசி வருகின்றனர்.
கர்நாடக காங். தலைவர் விளக்கம்
இந்நிலையில் அம்மாநில காங்கிரஸ் தலைவர் டி.கே. சிவக்குமார் நேற்று (ஜூலை.24) செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது,"யார் வேண்டுமானாலும் முதலமைச்சர் ஆக வேண்டும் என கனவு காணலாம். தேர்தலில் தோற்றாலும் முதலமைச்சராக முடியும் என்பதை கர்நாடகாவின் கடந்த காலங்களை புரட்டி பார்த்தாலே தெரியும்.
முதலமைச்சராகும் கனவு
அனைத்து எம்.எல். ஏக்களுக்கும் முதலமைச்சராகும் கனவு காண உரிமை உண்டு. இது மாதிரியான ஆசைகள் இருப்பதில் எவ்வித தவறுமில்லை.
எனினும முக்கிய முடிவுகளை கட்சி மேலிடம் தான் எடுக்கமுடியும். அதற்கு முன்னதாக சட்டப்பேரவை தேர்தலை சந்திக்கவேண்டும். சட்டப்பேரவை உறுப்பினர்களின் ஒரு சாராருடைய கருத்துக்களைதான் ஊடகங்களின் மூலம் அறிய நேர்ந்தது.
இந்த விவகாரம் குறித்து எதிர்க்கட்சி தலைவராக இருக்கும் சித்தாராமையா கவனம் செலுத்துவார். ஒருவேளை அவர் கவனம் செலுத்த தவறினால், கட்சி மேலிடம் அதை பார்த்துக் கொள்ளும்.நான் முதலமைச்சராக அவரசப்படவில்லை" என்றும் சிவக்குமார் கூறினார்.
தம்பி..தேர்தல் இன்னும் வரல..
கர்நாடாகாவில் அடுத்த சட்டப்பேரவை தேர்தலுக்கு இன்னும் இரண்டு ஆண்டுகள் உள்ளன. முதலமைச்சராகும் எண்ணத்தில், அம்மாநில காங்கிரஸ் கட்சி தலைவர் டி.கே சிவக்குமாரும், எதிர்க்கட்சி தலைவர் சித்தாராமையாவும் செயல்பட்டு வருகின்றனர்.
இந்நிலையில், சித்தாராமையாதான் கர்நாடாகாவின் அடுத்த முதலமைச்சர் என ஆறுக்கும் மேற்பட்ட சட்டப்பேரவை உறுப்பினர்கள் முன்னிலைப்படுத்துவது கட்சிக்குள் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பாக டி.கே.சிவக்குமார் கட்சி மேலிடத்தில் புகார் அளித்துள்ளார்.
இதையடுத்து, சித்தாராமையாவை முதலமைச்சராக சித்தரித்து ஊடகங்களில் கட்சியைச் சேர்ந்தவர்கள் பேட்டி அளிக்கக் கூடாது என அம்மாநில காங்கிரஸ் கட்சி மேலிடப் பொறுப்பாளர் தெரிவித்துள்ளார்.
மறுத்த சித்தாராமையா
இந்த சர்ச்சைகள் குறித்து நேற்று (ஜூன்.24) செய்தியாளர்களிடம் பேசிய சித்தாராமையா," என்னை அடுத்த முதலமைச்சராக முன்னிலைப்படுத்த வேண்டாம். நான் முதலமைச்சராவேன் என எப்போதும் கூறியதில்லை" என்றார்.
இதையும் படிங்க: ‘கோவாக்சின்’ தடுப்பூசி: உலக சுகாதார அமைப்பின் ஒப்புதல் பெற மம்தா கடிதம்!