ETV Bharat / bharat

இரவு 9 மணி செய்திச் சுருக்கம் Top 10 news @ 9 PM - இரவு 9 மணி செய்தி

ஈடிவி பாரத்தின் இரவு 9 மணி செய்தி சுருக்கம்

9 PM
9 PM
author img

By

Published : Oct 7, 2021, 9:10 PM IST

1. விமானப்படை அலுவலர் அமிதேஷை 7 நாள் காவலில் எடுத்து விசாரிக்க நீதிமன்றத்தில் மனு

விமானப்படை பெண் அலுவலரை சக அலுவலர் பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில், கைதான அமிதேஷை 7 நாள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

2. கனிம வளம் கொள்ளை - சமூக ஆர்வலர்கள் கண்டனம்

கோயம்புத்தூரில் செங்கல் சூளைகள் இயங்கி வந்தபோது அளவுக்கு அதிகமாக கனிம வளம் எடுக்கப்பட்டதால், பெரும் பள்ளங்கள் உருவாகின. தற்போது அதனை சமன்செய்யும் பணிக்கு சமூக ஆர்வலர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

3. 2021 இலக்கியத்திற்கான நோபல் பரிசு அறிவிப்பு

2021ஆம் ஆண்டு இலக்கியத்திற்கான நோபல் பரிசு தான்சானியாவைச் சேர்ந்த அப்துல்ரசாக் குர்னாவுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

4. அவதூறு வழக்கில் ஹெச். ராஜாவுக்கு பிடிவாரண்ட்!

இந்து அறநிலையத் துறை அலுவலர்கள் மற்றும் பெண்களைப் பற்றி அவதூறாக பேசியதாக தொடரப்பட்ட வழக்கில் பாஜக மூத்தத் தலைவர் ஹெச். ராஜாவுக்கு பிடிவாரண்ட் பிறப்பித்து ஸ்ரீவில்லிபுத்தூர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

5. சென்னையில் நிலத்தடி நீர் மட்டம் உயர்வு

சென்னையில் உள்ள மெட்ரோ ஏரிகளில் நீர் இருப்பு அதிகமாக உள்ள நிலையில் கடந்த சில தினங்களாக பெய்த மழை காரணமாக ஒரு சில மண்டலங்களில் நிலத்தடி நீர் மட்டமும் உயர்ந்துள்ளது.

6. பெங்களூருவில் தொடரும் துயரம்: மூன்றுமாடிக் கட்டடம் இடிந்து தரைமட்டம்

பெங்களூருவில் மூன்று மாடி கட்டடம் இடிந்து விழுந்தது விபத்து ஏற்பட்டுள்ளது.

7. பதுக்கம்மா பண்டிகையில் நடனமாடிய தெலங்கானா ஆளுநர் தமிழிசை

தெலங்கானா மாநிலத்தின் பாரம்பரியமிக்க பதுக்கம்மா பண்டிகையில் பங்கேற்ற மாநில ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன், குழுமியிருந்த பெண்களுடன் கும்மி அடித்து நடனமாடினார். இந்த விழாவானது தெலங்கானா ராஜ்பவனில் நடைபெற்றது.

8. பாகிஸ்தானில் நிலநடுக்கம்; 20 பேர் உயிரிழப்பு!

பாகிஸ்தான் நிலநடுக்கத்தில் சிக்கி 20 பேர் உயிரிழந்தனர். 300க்கும் மேற்பட்டோர் காயமுற்றனர். பலர் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

9. ’வருத்தப்படாத வாலிபர் சங்கம் 2 வருவது உறுதி’ - இயக்குநர் தகவல்

'வருத்தப்படாத வாலிபர் சங்கம்' திரைப்படத்தின் இரண்டாவது பாகம் உருவாகவுள்ளதாக இயக்குநர் பொன்ராம் தெரிவித்துள்ளார்.

10.டாக்டருடன் இணைந்த மாநாடு.. கைகோர்க்கும் சிம்பு-சிவகார்த்திகேயன்!

டாக்டர் திரையிடப்படும் திரையரங்குகளில் சிம்பு நடித்துள்ள மாநாடு படத்தின் ட்ரெய்லரை ஒளிபரப்ப முடிவு செய்யப்பட்டுள்ளது.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.