1. அண்ணா பல்கலைக்கழக தற்காலிகப் பணியாளர்கள்கள் - பணி நிரந்தர வாய்ப்பு?
அண்ணா பல்கலைக்கழகத்தில் தற்காலிக அடிப்படையில் பணிபுரிந்துவரும் பணியாளர்களைப் பணி நிரந்தரம் செய்வது குறித்தும், புதிதாக விரிவுரையாளர்களைத் தேர்வு செய்வதற்கான அனுமதி வழங்குவது குறித்தும் இன்று நடக்கும் ஆட்சிமன்றக் குழுக் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டு ஒப்புதல் பெறுவதற்கான வாய்ப்புகள் உள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
2. இரவில் வண்ணமயமாக ஜொலிக்கும் மெரினா
சென்னை மெரினாவை மேலும் அழகுப்படுத்தும்விதத்தில், காந்தி சிலையின் பின்புறம் இருக்கும் நீரூற்றைப் புதுப்பித்து, வண்ண விளக்குகள் பொருத்தப்பட்டுள்ளன. இதனால் இரவில் மெரினா வண்ணமயமாகக் காட்சியளிக்கிறது.
3. கீழே கிடந்த செல்போனை காவல் நிலையத்தில் ஒப்படைத்த மூதாட்டி
கோவையில் கீழே கிடந்த செல்போனை காவல் நிலையத்தில் ஒப்படைத்த மூதாட்டிக்கு பொன்னாடை அணிவித்து போலீசார் பாராட்டு தெரிவித்தனர்.
4. சாதி பெயரைச் சொல்லி திட்டிய இருவர் - நடவடிக்கை எடுக்கக் கோரி எஸ்பியிடம் மனு
மயிலாடுதுறையில் சாதி பெயரைச் சொல்லி திட்டியதாக காவலர் உள்ளிட்ட இருவர் மீது போடப்பட்ட வழக்கு குறித்து காவல் துறை உயரலுவலர்கள் விசாரணை நடத்த வலியுறுத்தி 100க்கும் மேற்பட்டோர் காவல் கண்காணிப்பாளரிடம் மனு அளித்துள்ளனர்.
5. சிறப்புப் பண்புகளுடன் கூடிய 35 பயிர் வகைகளை நாட்டுக்கு அர்ப்பணிக்கிறார் பிரதமர்!
பருவநிலை மாற்றம், ஊட்டச்சத்து குறைபாடு ஆகிய இரட்டை சவால்களை எதிர்கொள்ளும் வகையில், சிறப்புப் பண்புகளுடன் கூடிய 35 பயிர் வகைகளை பிரதமர் மோடி நாட்டுக்காக அர்ப்பணிக்கிறார்.
6. புதுச்சேரி மாநிலங்களவை உறுப்பினராக செல்வகணபதி தேர்வு
புதுச்சேரி மாநிலங்களவை உறுப்பினராக பாஜகவைச் சேர்ந்த செல்வகணபதி போட்டியின்றித் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
7. பிரதமர் குறிப்பிட்ட நாகநதி புனரமைப்புத் திட்டத்தின் தற்போதைய நிலை என்ன?
பிரதமர் மோடி 'மன் கி பாத்' உரையில் குறிப்பிட்ட, நாகநதி புனரமைப்புத் திட்டம் தற்போது எட்டு மாவட்டங்களுக்கு விரிவாக்கம் பெற்றுள்ளதாக அத்திட்டத்தின் இயக்குநர் தெரிவித்துள்ளார்.
8. இந்தியாவின் ஆகாஷ் ஏவுகணை பரிசோதனை வெற்றி
ஆகாஷ் ஏவுகணை புதிய பதிப்பான 'ஆகாஷ் பிரைம்' துல்லியமாக இலக்கைத் தாக்கி பரிசோதனையை வெற்றிகரமாக நிறைவுசெய்தது.
9. செய்தியாளர் வீட்டில் 15 பவுன் தங்க நகைகள், ரூ. 60 ஆயிரம் கொள்ளை
ராமேஸ்வரம் பாரதி நகரில் வசித்துவரும் செய்தியாளர் வீட்டில் பட்டப்பகலில் கதவை உடைத்து, 15 பவுன் தங்க நகைகள், ரூ. 60 ஆயிரம் ரொக்கப் பணத்தை கொள்ளையர்கள் கொள்ளையடித்து சென்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
10. ‘ஆன்டி இந்தியன்’ படத்திற்கு சென்சாரில் 38 கட் - ப்ளூ சட்டை மாறன்!
'ஆன்டி இந்தியன்' திரைப்படத்தில் 38 கட் வேண்டும் என்று தணிக்கைக் குழுவினர் கூறியதாவும், ஆனால் நீதிமன்றத்தை நாடி எந்த கட்'டும் இல்லாமல் தணிக்கைச் சான்றிதழ் பெற்றுள்ளதாக இயக்குனர் ப்ளூ சட்டை மாறன் தெரிவித்தார்.