திருச்சூர்(கேரளா): தெலங்கானா மாநிலம், ஹைதராபாத்தில் உள்ள ஈடிவி பாரத் செய்தி நிறுவனத்தில் உதவி ஆசிரியராகப் பணியாற்றி வந்த நிவேதிதா சூரஜ்(26), நேற்று (நவ.19) சாலை விபத்தில் உயிரிழந்தார். அதிகாலையில் அலுவலகத்திற்குச் செல்லும் வழியில், சாலையைக் கடக்கும்போது கார் மோதியதில், நிவேதிதா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
நிவேதிதா சூரஜின் உடல் கேரளாவில் உள்ள அவரது சொந்த ஊரான திருச்சூர் - படியூருக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து, படியூரில் உள்ள விருத்திபரம்பில் இல்லத்தில் இன்று காலை 10:30 மணிக்கு நிவேதிதாவின் இறுதிச்சடங்கு நடைபெற்றது.
அதில் ஈடிவி பாரத் கேரள இணையதளத்தின் செய்தி ஆசிரியர் பிரவீன் குமார், கேரளா உழைக்கும் பத்திரிகையாளர்கள் சங்கத்தின் தலைவர் வினிதா உள்ளிட்டோர் கலந்து கொண்டு இறுதி அஞ்சலி செலுத்தினர். அதேபோல், நிவேதிதாவின் உறவினர்கள், நண்பர்கள், உடன் பணிபுரிந்தவர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டு நிவேதிதாவின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினர்.
இதையும் படிங்க:ஈடிவி பாரத் பத்திரிகையாளர் நிவேதிதா சூரஜ் சாலை விபத்தில் உயிரிழப்பு