இன்றைய முக்கிய நிகழ்வு, தொகுப்புகள்.
- பிரதமர் நரேந்திர மோடி உரை: தேசிய கல்விக் கொள்கை 2020இல் சீர்திருத்தங்கள் கொண்டுவரப்பட்டு ஓராண்டு நிறைவு பெற்றுள்ளதை குறிக்கும் வகையில் பிரதமர் நரேந்திர மோடி காணொலி வாயிலாக வியாழக்கிழமை (ஜூலை 29) உரையாற்றுகிறார். இதில், நாடு முழுவதும் உள்ள கல்வி மற்றும் கொள்கை வகுப்பாளர்கள், ஆசிரியர்கள் கலந்துகொள்கிறார்கள். பிரதமர் தனது உரையின்போது, கல்வித்துறையில் பல்வேறு முன்முயற்சிகளை அறிமுகப்படுத்துகிறார்.
- தமிழ்நாடு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு: தமிழ்நாடு அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் உள்ளிட்டோருக்கு அகவிலைப்படி சம்பள உயர்வு இன்று வெளியாக வாய்ப்புகள் உள்ளன. அண்மையில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அமைச்சரவை மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி ஊதிய உயர்வு வழங்கி அறிவித்தது குறிப்பிடத்தக்கது.
- ஜேஎன்யூ விண்ணப்பம்: டெல்லி ஜேஎன்யூ பல்கலைக்கழக நுழைவுத் தேர்வு செப்டம்பர் 30ஆம் தேதி நடைபெறவுள்ள நிலையில் அதற்கான விண்ணப்பங்கள் முன்பதிவு தொடங்கியுள்ளன.
- மக்களவை அமர்வு: பெகாசஸ் விவகாரத்தில் எதிர்க்கட்சிகளின் கூச்சல் குழப்பம் காரணமாக ஒத்திவைக்கப்பட்ட மக்களவை அமர்வு இன்று காலை 11 மணிக்கு மீண்டும் தொடங்குகிறது.
- மாற்றுத்திறனாளிகளுக்கு கரோனா தடுப்பூசி: விழுப்புரம் மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு 101 இடங்களில் கரோனா தடுப்பூசி சிறப்பு முகாம் நடைபெறுகிறது.
- பாசனத்துக்கு நீர் திறப்பு: கிருஷ்ணகிரி மாவட்டம் கெலவரப்பள்ளி தேக்கத்தில் இருந்து இன்று முதல், முதல்போக பாசனத்துக்கு நீர் திறந்துவிட தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.
- கனமழை எச்சரிக்கை: இமாச்சலப் பிரதேசத்தில் கனமழை காரணமாக உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ள நிலையில் இன்றும் கனமழை பெய்யக் கூடும் என முன்னறிவித்துள்ள இந்திய வானிலை ஆராய்ச்சி மையம் சிவப்பு எச்சரிக்கையும் விடுத்துள்ளது.
இதையும் படிங்க : டோக்கியோ ஒலிம்பிக் 7ஆவது நாள்: இந்தியா பங்கேற்கும் போட்டி அட்டவணை