டெல்லி: ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி அமைப்பின் உச்சபட்ச முடிவுகளை எடுக்கும் மத்திய அறங்காவலர் குழுவின் ஆண்டு ஆலோசனைக் கூட்டம் கடந்த திங்கட்கிழமை (மார்ச் 27) நடைபெற்றது. இந்த கூட்டத்தில் நடப்பு 2022 - 23 நிதி ஆண்டுக்கான ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதியின் வட்டி குறித்த பல்வேறு அம்சங்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டபன.
இதில் 2022 - 23 நிதி ஆண்டுக்கான ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி 8 புள்ளி 15 சதவீதமாக உயர்த்தி அறிவிக்கப்பட்டது. மத்திய நிதி அமைச்சகம் மூலம் வட்டி விகிதம் அங்கீகரிப்பட்ட பின்னரே இபிஎஃப்ஓ வட்டி விகிதம் குறித்த அறிவிப்பை வெளியிடுகிறது. கடந்த 2021 - 22 நிதி ஆண்டு 8 புள்ளி 1 சதவீதமாக இந்த அமைப்பு அறிவித்தது.
இது கடந்த 40 ஆண்டுகளில் இல்லாத அளவில் குறைந்தபட்சம் என தெரிவிக்கப்பட்டது. இதற்கு முன் கடந்த 1977 - 78 நிதி அண்டில் 8 சதவீதமாக அறிவிக்கப்பட்டு இருந்ததே குறைந்தபட்சம் என கூறப்படுகிறது. இதற்கு முன் கடந்த 2018 - 19 நிதி ஆண்டில் மத்திய நிதி அமைச்சகம் 8 புள்ளி 65 சதவீதமாக வருங்கால வைப்பு நிதியின் வட்டி விகிதத்தை உயர்த்தி இருந்தது.
கரோனா காரணமாக கடந்த 3 முதல் நான்கு நிதி ஆண்டுகளாக வருங்கால வைப்பு நிதியின் வட்டி விகிதம் ஸ்திரத்தன்மையற்ற சூழலில் நிலவியது. கடந்த திங்கட்கிழமை கூடிய கூட்டத்தின் முதல் நாளில் நவம்பர் 4, 2022 அன்று உச்ச நீதிமன்றத்தின் உயர் ஓய்வூதியத் தீர்ப்பை அமல்படுத்துவது குறித்த நிலை அறிக்கையை இபிஎஃப்ஓ சமர்ப்பித்தது.
இதையும் படிங்க: அமெரிக்க பள்ளியில் துப்பாக்கிச் சூடு - 3 குழந்தைகள் உள்பட 6 பேர் பலி - முன்னாள் திருநங்கை மாணவர் திட்டம் அம்பலம்!