குப்வாரா பகுதியில் நடந்த நிகழ்ச்சியில் பேசிய எல்லை பாதுகாப்பு படையின் கூடுதல் இயக்குநர் ஜெனரல் சுரிந்தர் பன்வார், கடந்த ஆண்டு 140 பயங்கரவாதிகள் ஊடுருவிய நிலையில், நடப்பாண்டில் 25 முதல் 30 பேர் வரை மட்டுமே ஊடுருவியுள்ளனர்.
பனிபொழிவுக்கு முன்பாக 250 முதல் 300 தீவிரவாதிகள் ஊடுருவத் தயாராக உள்ளனர். அவர்களை தீவிரமாக கண்காணிக்கும் பணி நடைபெற்று வருவதாக தெரிவித்தார்.
அண்மையில் குப்வாரா மாவட்டத்தில் அத்துமீறி நுழைந்த பயங்கரவாதிகள் மீது ராணுவத்தினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் மூன்று பேர் கொல்லப்பட்டனர் என்றார்.
இதையும் படிங்க: இந்தியாவுக்குள் நுழைய முயன்ற பயங்கரவாதி சுட்டுக்கொலை!