சத்தீஸ்கர் மாநிலம் பிஜாப்பூர் மாவட்டத்தில் உள்ள வனப் பகுதியில் நடத்தப்பட்ட என்கவுன்டரின்போது பாதுகாப்பு படை வீரர் ஒருவர் உயிரிழந்தார்.
சிலர் படுகாயம் அடைந்துள்ளனர். என்கவுன்டர் சம்பவத்தின்போது நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் மாவோயிஸ்டுகள் சிலர் உயிரிழந்திருக்கலாம் எனக் காவல்துறையினர் கூறுகின்றனர்.
தர்ரேம் பகுதியில் நக்சல் தடுப்பு நடவடிக்கையின் ஒரு அங்கமாக பாதுகாப்பு படையினர் ஒன்று சேர்ந்து துப்பாக்கிச்சூடு நடத்தினர்.
கோப்ரா, மாவட்ட ரிசர்வ் படை, சிறப்பு அதிரடி படை ஆகியவை இணைந்து இந்த என்கவுன்டரை நடத்தியதாக சத்தீஸ்கர் காவல்துறை இயக்குநர் அவஸ்தி தெரிவித்துள்ளார்.