தலைமை தேர்தல் ஆணையராக இருந்த சுனில் அரோராவின் பதவிக்காலம், ஏப்ரல் 30ஆம் தேதியோடு முடிவடைந்த நிலையில், அப்பதவியில் தேர்தல் ஆணையர் சுஷில் சந்திரா நியமிக்கப்படவுள்ளார்.
அதற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுவிட்டதாகவும் அதற்கான ஆணை எந்த நேரத்தில் வேண்டுமானாலும் வெளியிடப்படலாம் எனவும் தெரிகிறது. பொதுவாக, தேர்தல் ஆணையத்தில் மூன்று உறுப்பினர்கள் இருப்பார்கள். தலைமை தேர்தல் ஆணையர் ஓய்வு பெறும் பட்சத்தில் மூத்த ஆணையர் அப்பதவிக்கு நியமிக்கப்படுவார்.
கடந்த 2019ஆம் ஆண்டு, பிப்ரவரி 14ஆம் தேதி, மத்திய நேரடி வரிகள் வாரியத்தின் தலைவராக இருந்த சுஷில் சந்திரா தேர்தல் ஆணையராக நியமிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.