ETV Bharat / bharat

ஏக்நாத் - ஃபாட்னாவிஸ் நள்ளிரவில் ரகசிய சந்திப்பு - அமித் ஷாவும் இருந்தாரா?

author img

By

Published : Jun 26, 2022, 12:10 PM IST

குஜராத்தின் வதோராவில் ஏக்நாத் ஷிண்டே, பாஜகவின் முன்னாள் முதலமைச்சர் தேவந்திர ஃபாட்னாவிஸ் ஆகியோர் நேற்று முன்தினம் ரகசியமாக சந்தித்துள்ளனர் என தகவல் வெளியாகியுள்ளது. அந்த சந்திப்பில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவும் இருந்ததாக கூறப்படுகிறது.

கவுகாத்தி ஹோட்டலில் இருந்து காணாமல் போன ஏக்நாத் ஷிண்டே- பாஜக ஃபட்னாவிஸுடன் ரகசிய சந்திப்பு?

மும்பை: மகாராஷ்டிராவில் ஆளும் கட்சியான சிவசேனாவில் நிலவி வரும் அரசியல் சிக்கல்களுக்கு மத்தியில் ஏக்நாத் ஷிண்டே, எதிர்க்கட்சித் தலைவர் தேவேந்திர ஃபட்னாவிஸை சந்தித்ததாக தகவல் வெளியாகியுள்ளது. முன்னதாக, அன்று நள்ளிரவில் அசாமில் இருந்து குஜராத்தின் வதோராவிற்கு ரகசிய விமானத்தில் சென்று அங்கு இருவரும் சந்தித்து, மகாராஷ்டிராவில் அடுத்து ஆட்சி அமைப்பது குறித்து ஆலோசனை நடத்தியதாக நம்பத்தகுந்த தகவல் வெளியாகியுள்ளது.

மேலும், ஃபட்னாவிஸ் குஜராத்தில் இருந்து மகாராஷ்டிரா திரும்பிய அதே நேரத்தில், ஷிண்டே கௌகாத்தி ஹோட்டலில் இருக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. மத்திய அமைச்சர் அமித் ஷாவும் அந்த சந்திப்பின்போது இருந்தார் எனவும் கூறப்படுகிறது. முன்னதாக, ஷிண்டே அவரது ஆதரவு எம்எல்ஏக்களுடன் பேசும்போது, 'ஒரு பெரிய தேசிய கட்சி'-ன் ஆதரவு இருப்பதாக சூசகமாக தெரிவித்திருந்தார். அந்த கட்சி மத்தியில் ஆளும் பாஜாகவாக இருக்கக்கூடும்.

தற்போது, சிவசேனா கட்சிக்கு எதிராக உள்ள 40 அதிருப்தி எம்எல்ஏக்கள் பாஜாகவின் தூண்டுதலின் பெயரில் செயல்பட்டிருக்கலாம் என்ற சந்தேகிக்கப்படுகிறது. இருப்பினும் இந்த விவகாரமானது சிவசேனாவின் உள்கட்சி பிரச்சனை எனவும் இதற்கும் தங்களுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை எனவும் பாஜக தொடர்ந்து மறுப்பு தெரிவித்து வருகிறது. பாஜக மகாராஷ்டிர தலைவர் சந்திரகாந்த் பாட்டீல், 'மாநிலத்தில் நடந்துவரும் அரசியல் நெருக்கடியில் எங்களது கட்சி எந்தப் பங்கையும் வகிக்கவில்லை' என்று தெரிவித்துள்ளார்.

ஷிண்டேவுக்கு ஆதரவான எம்எல்ஏக்கள் குழு சமீபத்தில் தங்களை 'சிவசேனா (பாலாசாஹேப்)' கட்சியாக அறிவித்தது. தாங்கள் இன்னும் சேனாவை விட்டு வெளியேறவில்லை என்றும் தெரிவித்துள்ளது. பாலாசாஹேப் தாக்கரேயின் பெயரை தவறாகப் பயன்படுத்தியதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள சிவசேனா, அரசியல் ஆதாயங்களுக்காக அதை யார் பயன்படுத்தினாலும் சட்டரீதியான விளைவுகளை சந்திக்க நேரிடும் என எச்சரித்துள்ளது. இதற்கிடையில், மகாராஷ்டிர சட்டப்பேரவை துணை சபாநாயகர் 16 சிவசேனா எம்எல்ஏக்களிடம் நாளுக்குள் (ஜூலை 27) எழுத்துப்பூர்வமாக பதில் அளிக்குமாறு தகுதி நீக்க நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.

இதையும் படிங்க: சிவசேனா கட்சியைச் சேர்ந்த 16 சட்டப்பேரவை உறுப்பினர்கள் தகுதி நீக்கம்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.