ETV Bharat / bharat

மணிப்பூரில் மறுபிறவி எடுத்த 8 வயது சிறுவன்.. ஆச்சரியத்தில் கிராம மக்கள்!

மணிப்பூரில் உள்ள எட்டு வயது சிறுவன் மீண்டும் மறுபிறவி எடுத்துள்ளதாக கூறியுள்ள சம்பவம் கிராம மக்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. பாட்டியை மனைவி என்றும் அம்மாவை மகள் என்றும் அழைத்த அவர் முற்பிறவியில் தான் இறந்ததற்கான காரணத்தையும் கூறியதாக தகவல் வெளியாகியுள்ளது.

Etv BharatEight year old boy claims to be reincarnated in Mainpuri

author img

By

Published : Jun 18, 2023, 5:46 PM IST

மணிப்பூர்: ரத்தன்பூரை சேர்ந்த மனோஜ் மிஸ்ரா என்பவர் கடந்த 2015-ஆம் ஆண்டு ஜனவரி 9-ஆம் தேதி தனது வயலில் வேலை செய்துக்கொண்டிருந்த போது விஷப்பாம்பு தாக்கியதில் உயிரிழந்ததாக கூறப்படுகிறது. அந்த சமயத்தில் அவரது மகள் ரஞ்சனா நிறைமாத கர்ப்பிணியாக இருந்துள்ளார்.

மனோஜ் மிஸ்ரா இறந்து 20 நாட்களுக்குப் பிறகு ரஞ்சனாவுக்கு ஆண் குழந்தை பிறந்தது. இந்த குழந்தைக்கு ஆர்யன் என்று பெயர் சூட்டியுள்ளனர். ஆர்யனுக்கு நான்கு வயதான போது விசித்திரமான விஷயங்களைப் பேச ஆரம்பித்தாகவும், தான் மனோஜ் மிஸ்ரா என்றும் மறுபிறவி எடுத்துள்ளதாகவும் கூறியுள்ளார்.

இதையடுத்து ஜூன் 15ம் தேதி அவரது பாட்டி வீட்டுக்கு சென்ற ஆர்யன், பாட்டியின் பாதங்களைத் தொட்டு, நீ என் மனைவி, பாட்டி அல்ல என்றும், ரஞ்சனாவிடம் நீ என் மகள், என்னுடைய அம்மா இல்லை என்றும் கூறியுள்ளார். அதேபோல் தனது தாய்மாமன்களான அஜய் மற்றும் அனுஜ் ஆகியோரை தனது மகன் என்று அழைத்ததாக கூறப்படுகிறது.

இதையும் படிங்க: சூரத்தில் ஒரு 'தங்கல்' - டீ வியாபாரியின் 3 மகள்கள் தேசிய சாதனை!

இதையடுத்து தாய்மாமன்கள் இருவரையும் பார்த்து கதறி அழ ஆரம்பித்த சிறுவன் ஆர்யன் தனது முந்தைய பிறவியில் வயலுக்கு தண்ணீர் பாய்ச்ச சென்றபோது, ஒரு விஷப்பாம்பு தன்னைக் கடித்ததில் தான் உயிரிழந்துவிட்டதாகவும், கூறிய அவர் வங்கிக் கணக்கில் டெபாசிட் செய்யப்பட்ட பணத்தை துல்லியமாக தெரிவித்தார். ஆர்யனின் இந்த வார்த்தைகளைக் கேட்டு குடும்பத்தினர் அதிர்ச்சியடைந்தனர். இந்த செய்தி கிராம மக்களுக்கு தெரிய வந்ததும், ஆர்யனை பார்க்க ஏராளமான மக்கள் வீட்டிற்கு வந்தனர். 8 வயது சிறுவன் மறுபிறவி எடுத்ததாக கூறப்படும் செய்தியைக் கேட்டு பலரும் ஆச்சரியத்தில் ஆழ்ந்துள்ளனர்.

மறுபிறவி நம்பிக்கைகள் உலகின் பல சமூகங்களில் இன்னும் உள்ளது. மனித ஆன்மாவின் பயணத்தையே பிறவிகளாக விளக்கப்படுகிறது. அதாவது ஒரு மனிதர் இறந்துவிட்டாலும் அவரின் ஆன்மா இறப்பதில்லை. அது அடுத்தடுத்த நபர்களுக்கு தலைமுறைகள் கடந்தும் பயணிக்கிறது என்கிறார்கள் என்று நம்பப்படுகிறது.

இதையும் படிங்க:கடலில் 1000 கிலோமீட்டர் வரை படகில் பயணம் செய்து தமிழக பெண் காவலர்கள் சாதனை - வாழ்த்திய டிஜிபி

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.