பண மோசடி விவகாரம் தொடர்பாக உத்தரப்பிரதேசத்தின் சமாஜ்வாடி கட்சித் தலைவர் அசம் கான், பகுஜன் சமாஜ் கட்சி எம்எல்ஏ முக்தார் அன்சாரி, முன்னாள் எம்பி அடிக் அகமது ஆகியோரை அமலாக்கத்துறை விசாரிக்க உள்ளது.
இந்த மூவரும் தற்போது உத்தரப் பிரதேசத்தின் வெவ்வேறு சிறைகளில் அடைக்கப்பட்டுள்ள நிலையில், இவர்களை காவலில் எடுத்து விசாரிக்க, அமலாக்கத்துறை, நீதிமன்றங்களிடம் அனுமதி பெற்றுள்ளது.
அசம் கான் தற்போது உத்தரப் பிரதேசத்தின் சீதாபூர் சிறையில் அடைக்கப்பட்டு பல வழக்குகளை சந்தித்து வருகிறார். அன்சாரி பண்டா மாவட்டச் சிறையிலும், அடிக் அகமதாபாத்தில் உள்ள சபர்மதி சிறையிலும் உள்ளார்.
முன்னதாக அசம் கான் தலைமையிலான மவுலானா முஹம்மது அலி ஜவுஹர் அறக்கட்டளையால் நடத்தப்படும் முகமது அலி ஜவுஹர் பல்கலைக்கழகத்திடமிருந்து, ராம்பூர் மாவட்ட நிர்வாகம், 70.05 ஹெக்டேர் அளவிலான நிலத்தை திரும்பப் பெற்றது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: பஞ்சாப் முதலமைச்சராக சரண்ஜித் சிங் பதவியேற்பு