ETV Bharat / bharat

ஆகஸ்ட் 11இல் குடியரசு துணை தலைவராக ஜெகதீப் தன்கர் பதவியேற்பு! - ஆகஸ்ட் 11ல் குடியரசு துணை தலைவராக ஜெகதீப் தன்கர் பதவியேற்பு

இந்தியாவின் 14ஆவது துணை குடியரசு தலைவராக ஜெகதீப் தன்கர் தேர்வு செய்யப்பட்டுள்ள நிலையில், தேர்தல் ஆணையம் அதற்கான சான்றிதழை அவரிடம் வழங்கியுள்ளது.

VP Dhankhar
VP Dhankhar
author img

By

Published : Aug 7, 2022, 1:23 PM IST

டெல்லி: துணை குடியரசு தலைவர் தேர்தல் நேற்று (ஆகஸ்ட் 6) நடைபெற்றது. வாக்குப்பதிவு காலை 10 மணிக்கு தொடங்கி, மாலை 5 மணிக்கு நிறைவடைந்தது. இரு அவைகளிலும் மொத்தமாக 780 எம்.பிக்கள் உள்ள நிலையில், அதில் 725 பேர் வாக்களித்தனர்.

வாக்கு எண்ணிக்கை முடிவில், பாஜக கூட்டணி வேட்பாளர் ஜெகதீப் தன்கர் 528 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். அவரை எதிர்த்து போட்டியிட்ட எதிர்க்கட்சி வேட்பாளர் மார்கரெட் ஆல்வா 182 வாக்குகள் பெற்று தோல்வி அடைந்தார். கடந்த ஆறு முறை நடந்த துணை குடியரசு தலைவர் தேர்தல்களில் இல்லாத அளவுக்கு, சுமார் 74 சதவீத வாக்குகளை தன்கர் பெற்றுள்ளார்.

இந்நிலையில், இந்தியாவின் 14ஆவது குடியரசு துணை தலைவராக ஜெகதீப் தன்கர் தேர்வு செய்யப்பட்டதாக தேர்தல் ஆணையம் இன்று (ஆக. 7) சான்றிதழ் வழங்கியுள்ளது. வரும் ஆக. 11ஆம் தேதி புதிய துணை குடியரசு தலைவராக ஜெகதீப் தன்கர் பதவியேற்க உள்ளார்.

இதையும் படிங்க:குடியரசு துணைத் தலைவர் தேர்தல்.. பாஜக கூட்டணி வேட்பாளர் ஜெகதீப் தன்கர் வெற்றி...

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.