டெல்லி: நிலவின் மேற்பரப்பை ஆய்வு செய்யும் விதமாக, இந்திய விண்வெளி ஆய்வு அமைப்பு(ISRO) நிறுவனத்தால், விண்ணில் ஏவப்பட்ட சந்திரயான் 3 விண்கலம், வெற்றி இலக்கை நோக்கி தொடர்ந்து முன்னேறி வருகிறது. இதனிடையே, சந்திரயான் 3 விண்கலத்தில் உள்ள கேமராக்கள் எடுத்து உள்ள பூமி மற்றும் நிலவின் போட்டோக்களை இஸ்ரோ நிறுவனம், தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டு உள்ளது.
சந்திரயான்-3 விண்கலத்தின் நிலவில் தரையிறங்கக்கூடிய லேண்டர் பகுதியில் உள்ள கேமரா மூலம் எடுக்கப்பட்ட அந்த புகைப்படங்களில், 120 கிலோமீட்டர் விட்டம் கொண்ட பிதாகரஸ் பள்ளம் முதல் எரிமலைகளால் ஏற்பட்ட சமவெளிகள் உள்ளிட்டவைகளை துல்லியமாக அதில் காண முடிகிறது.
-
Chandrayaan-3 Mission:
— ISRO (@isro) August 10, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data="
🌎 viewed by
Lander Imager (LI) Camera
on the day of the launch
&
🌖 imaged by
Lander Horizontal Velocity Camera (LHVC)
a day after the Lunar Orbit Insertion
LI & LHV cameras are developed by SAC & LEOS, respectively https://t.co/tKlKjieQJS… pic.twitter.com/6QISmdsdRS
">Chandrayaan-3 Mission:
— ISRO (@isro) August 10, 2023
🌎 viewed by
Lander Imager (LI) Camera
on the day of the launch
&
🌖 imaged by
Lander Horizontal Velocity Camera (LHVC)
a day after the Lunar Orbit Insertion
LI & LHV cameras are developed by SAC & LEOS, respectively https://t.co/tKlKjieQJS… pic.twitter.com/6QISmdsdRSChandrayaan-3 Mission:
— ISRO (@isro) August 10, 2023
🌎 viewed by
Lander Imager (LI) Camera
on the day of the launch
&
🌖 imaged by
Lander Horizontal Velocity Camera (LHVC)
a day after the Lunar Orbit Insertion
LI & LHV cameras are developed by SAC & LEOS, respectively https://t.co/tKlKjieQJS… pic.twitter.com/6QISmdsdRS
இதையும் படிங்க: நிலவை நெருங்கும் சந்திரயான் 3 விண்கலம்... இஸ்ரோ கொடுத்த நல்ல சேதி!
சந்திரயான்-3 விண்கலம், நிலவின் சுற்றுவட்ட பாதையை நெருங்கி உள்ள நிலையில், இரண்டாவது முறையாக அதன் உயரம், 4,313 கிலோ மீட்டர் உயர அளவில் இருந்து 1,347 கிலோ மீட்டர் என்ற அளவிற்கு குறைக்கப்பட்டு உள்ளதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது.
சந்திரயான்-3 விண்கலத்தின் நிலவில் தரை இறங்கும் பகுதியான லேண்டர் பகுதியின் அடிப்பகுதியில் இடம்பெற்றுள்ள கேமராவின் மூலம் எடுக்கப்பட்ட நிலவின் புகைப்படங்கள், தற்போது வெளியிடப்பட்டு உள்ளன. ஆகஸ்ட் மாதம் 6-ஆம் தேதி, நிலவின் மேற்பரப்பில் இருந்து 18,000 முதல் 10,000 கிலோமீட்டர் உயரத்தில் இருந்து, புகைப்படங்களை எடுத்து சந்திரயான் - 3 விண்கலம் அனுப்பியிருந்தது.
லேண்டர் பகுதியின் அடிப்பகுதியில் இடம் பெற்றுள்ள கேமராவின் மூலம் எடுக்கப்பட்ட நிலவின் போட்டோக்களில், 120 கிலோமீட்டர் விட்டம் கொண்ட பிதாகரஸ் பள்ளம், எரிமலைகளால் ஏற்பட்ட ஓசினஸ் ப்ரோசெல்ரம், அரிஸ்டார்டிரஸ் பள்ளம், ராமன் பள்ளத்தாக்கு உள்ளிட்ட பகுதிகள் தெளிவாக புலப்படுகின்றன.
பூமியின் போட்டோ, சந்திரயான்-3 விண்கலத்தின் லேண்டர் பாகத்தின் முன்பக்கத்தில் இடம்பெற்றுள்ள இமேஜிங் கேமராவால் எடுக்கப்பட்டுள்ளது. சந்திரயான்-3 விண்கலம், பூமியின் மேற்பரப்பில் இருந்த போது, லேண்டரின் முன்பகுதியில் உள்ள இமேஜிங் கேமரா, இந்த படத்தை எடுத்து உள்ளதாக, இஸ்ரோ(Indian Space Research Organisation) தெரிவித்துள்ளது.