ETV Bharat / bharat

Red Alert Sabarimala: சபரிமலை செல்ல பக்தர்களுக்குத் தடை

தொடர் கனமழை காரணமாகவும், பம்பை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதாலும் சபரிமலைக்கு ரெட் அலர்ட் (Red Alert Sabarimala) கொடுக்கப்பட்டுள்ளது. இதனால், சபரிமலை பக்தர்கள் யாத்திரைக்கு (Sabarimala Pilgrimage) இன்று (நவ. 20) முதல் தடைவிதிக்கப்பட்டுள்ளது.

Red Alert Sabarimala, சபரிமலை, சபரிமலை செல்ல பக்தர்களுக்கு தடை
Red Alert Sabarimala
author img

By

Published : Nov 20, 2021, 8:14 AM IST

பத்தனம்திட்டா: கேரளாவின் பத்தனம்திட்டா மாவட்டத்தில் அமைந்துள்ள சபரிமலை ஸ்ரீ ஐயப்பன் கோயில் திருநடை கடந்த திங்கட்கிழமை (நவ.15) மாலை திறக்கப்பட்டது. கடந்த செவ்வாய்கிழமை (நவ. 16) காலை முதல் பக்தர்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டு வந்த நிலையில், வெள்ளப்பெருக்கு காரணமாக பம்பை ஆற்றில் நீராடுவதற்கு மட்டும் பக்தர்களுக்கு தடைவிதிக்கப்பட்டிருந்தது.

பத்தனம்திட்டா மாவட்டத்தில் தொடர்ந்து கனமழை பெய்துவருவதால் அணைகளின் நீர்மட்டம் வேகமாக உயர்ந்து வருகிறது. இதனால், சபரிமலை பம்பை ஆற்றில் வெள்ளப்பெருக்கு அதிகமாக காணப்படுகிறது. மேலும், பம்பை அணை (Pamba Dam), சபரிமலை உள்ளிட்ட பகுதிகளுக்கு ரெட் அலர்ட் கொடுத்து (Red Alert Sabarimala) வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

41 நாள்கள் நடை திறப்பு

இதனால், சபரிமலை பக்தர்கள் யாத்திரைக்கு (Sabarimala Pilgrimage) இன்று (நவ. 20) முதல் தடைவிதித்து பத்தனம்திட்டா மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். மேலும், கன மழை, பம்பை ஆற்றில் வெள்ள பெருக்கு குறைந்தபின்னர் மீண்டும் அனுமதி வழங்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.

41 நாள்கள் நடைபெறும் மண்டல மாவிளக்கு பூஜையை முன்னிட்டு சபரிமலை ஐயப்பன் கோயில் 41 நாள்கள் திறந்து இருக்கும். அதன்பின்னர், டிசம்பர் 26ஆம் தேதி கோயில நடை சாத்தப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: Tirumala Rains - தீவு போல் மாறிய திருப்பதி

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.