ETV Bharat / bharat

அதானி விவகாரம்: நாடாளுமன்றம் ஒத்திவைப்பு.. எதிர்கட்சிகள் தொடர் அமளி!

அதானி விவகாரம் தொடர்பாக விவாதம் செய்ய வலியுறுத்தி எதிர்கட்சிகள் தொடர் அமளியில் ஈடுபட்டதால் 4-வது நாளாக நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் ஒத்திவைக்கப்பட்டன.

நாடாளுமன்றம்
நாடாளுமன்றம்
author img

By

Published : Feb 7, 2023, 1:08 PM IST

டெல்லி: நடப்பாண்டின் முதல் நாடாளுமன்ற கூட்டத் தொடர் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு உரையுடன் தொடங்கியது. தொடர்ந்து நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன 2023-24 ஆம் நிதி ஆண்டிற்கான மத்திய நிதி நிலை அறிக்கையை தாக்கல் செய்தார். வரும் ஏப்ரல் 6ஆம் தேதி வரை இரு அமர்வுகளாக பட்ஜெட் மீதான விவாதம் நடைபெறுவதாக இருந்தது.

இருப்பினும், பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்ட மறுநாளில் இருந்தே நாடாளுமன்றம் தொடர்ந்து முடங்கி வருகிறது. அதானி குறித்து ஹிண்டர்ன்பர்க் ஆய்வு நிறுவனம் வெளியிட்ட அறிக்கை நாடாளுமன்றத்தில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தி உள்ளது. கடந்த வாரம் நாடாளுமன்றம் கூடியது முதல் இரு அவைகளிலும் இது தொடர்பாக விவாதம் நடத்தக் கோரி எதிர்கட்சிகள் அமளியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதனால் இரு அவைகளும் தொடர்ந்து 4-வது நாளாக முடங்கி வருகிறது. வழக்கம் போல் இன்று அவை கூடியதும், அதானி விவகாரம் குறித்து விவாதம் செய்ய வேண்டும் என எதிர்க்கட்சி எம்பிக்கள் வலியுறுத்தினர். உறுப்பினர்கள் தொடர் அமளியில் ஈடுபட்டதை அடுத்து நண்பகல் 12 மணி வரை அவை ஒத்திவைக்கப்பட்டது.

தொடர்ந்து நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள காந்தி சிலை முன் எதிர்கட்சி உறுப்பினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். ஒத்திவைப்பு முடிந்து அவை தொடங்கப்பட்ட நிலையில், மீண்டும் எதிர்கட்சி உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டனர். இதனால் மதியம் 2 மணி வரை அவைவை ஒத்திவைத்து சபாநாயக உத்தரவிட்டார்.

அதானி விவகாரம் தொடர்பாக விவாதிக்கக் கோரி எதிர்கட்சி உறுப்பினர்கள் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டு வருவதால் நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் இயங்கா நிலை ஏற்பட்டுள்ளது.

இதையும் படிங்க: ரூ.55 ஆயிரத்திற்காக பேத்தியை விற்ற பாட்டி.! - பாலியல் வன்கொடுமை பரிதாபம்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.