டெல்லியின் கரோல் பாக்கை சேர்ந்த முன்னா (40) என்பவர் ரிக்ஷா ஓட்டுநராக இருந்தார். இவரும் அதேப்பகுதியில் துப்புரவு பணி செய்துவரும் ஃபிரோஸ் கான் என்பவரும் நேற்று (ஜூலை 27) இரவு உணவு சாப்பிட்டுள்ளனர். அப்போது ஃபிரோஸ் கான் முன்னாவிடம் ஒரு சப்பாத்தியை கேட்டுள்ளார். ஆனால், முன்னா மறுத்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த ஃபிரோஸ் கான் முன்னாவை கத்தியால் குத்திவிட்டு அங்கிருந்து தப்பி ஓடினார். இதனைக்கண்ட பொதுமக்கள் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். இதற்குள் முன்னா உயிரிழந்தார். இதையடுத்து போலீசார் ஃபிரோஸ் கானை கைது செய்தனர்.
இதுகுறித்து போலீசார் தரப்பில், இந்த சம்பவத்தின்போது ஃபிரோஸ் கான் மதுபோதையில் இருந்தார். இதுகுறித்த சிசிடிவி காட்சிகளை சோதனையிட்டதில், ஃபிரோஸ் கான் கொலை செய்துள்ளது உறுதியாகியது. முன்னாவின் உடல் மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: ஒரே சிரிஞ்ச் மூலம் 30 மாணவர்களுக்கு கரோனா தடுப்பூசி