பெங்களூரு: பேருந்தில் பெண்ணின் சடையை பிடித்து இழுத்த குடிகார ஆசாமிக்கு அந்தப் பெண்ணால் சரமாரி செருப்படி கிடைத்தது பரபரப்பை ஏற்படுத்தியது.
இச்சம்பவம், கர்நாடக மாநிலம் பகல்கோட் மாவட்டத்தில் உள்ள கேரூர் பேருந்து நிலையத்தில் நடந்தேறியது.
குடிகார இளைஞர் ஒருவர் விஜயபுராவில் இருந்து ஹுப்ளிக்குச் செல்லும் பேருந்தில் பெண்ணின் தலை முடியை பிடித்து இழுத்து தவறாக நடந்துகொண்டதாகத் தெரிகிறது.
இதனால் ஆத்திரமடைந்த அந்தப் பெண், அந்த இளைஞரை செருப்பால் சரமாரியாகத் தாக்கினார். மேலும், பேருந்தில் இருந்த சகப் பயணிகளும் அவருக்குத் துணையாக அந்தக் குடிகார இளைஞரைத் தாக்கினர்.
இதை ஒருவர் தனது செல்போனில் வீடியோ எடுத்து இணையத்தில் பதிவித்துள்ளார். அக்காணொலி சமூக வளைதளங்களில் வைரலாகப் பரவி வருகிறது.