அஸ்ஸாம் மாநிலம், நகோன் மாவட்டம் டிங் பகுதியில் தடைசெய்யப்பட்ட போதைப்பொருள்கள் பதுக்கிவைக்கப்பட்டிருப்பதாக காவல் துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதனடிப்படியில், நேற்று (டிச. 07) காவல் துறையினர் அப்பகுதியில் தீவிர சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது, சோனாரி காவ்ன் பகுதியைச் சேர்ந்த ஹபில் அலி என்பவரின் வீட்டில் காவல் துறையினர் சோதனை மேற்கொண்டதில் 2 கிலோ ஹெராயின், 10 கிலோ ஓபியம், கஞ்சா உள்ளிட்டவை பறிமுதல்செய்யப்பட்டன.
இதையடுத்து, ஹபில் அலி, மொஃபிதுல் ஹக், பகதூல் ஆலம் ஆகிய மூவரை காவல் துறையினர் கைதுசெய்தனர். மேலும் பறிமுதல்செய்யப்பட்ட போதைப்பொருள்களின் மதிப்பு ரூ.7 கோடி முதல் ரூ.8 கோடி வரை இருக்கும் எனக் காவல் துறையினர் கூறுகின்றனர்.
இதையும் படிங்க: 16 வயது சிறுமியை ஆசைவார்த்தை கூறி பாலியல் வன்புணர்வு: சட்டக்கல்லூரி மாணவன் மீது பாய்ந்த போக்சோ!