ETV Bharat / bharat

The Elephant Whisperers: பொம்மன் - பெள்ளி தம்பதியை நேரில் அழைத்து பாராட்டிய குடியரசுத் தலைவர்!

ஆஸ்கர் நாயகர்களான பொம்மன் - பெள்ளி தம்பதியை குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு நேரில் ஆழைத்து பாராட்டு தெரிவித்துள்ளார்.

Etv Bharat
Etv Bharat
author img

By

Published : Jul 20, 2023, 12:43 PM IST

டெல்லி: உலகப் புகழ் பெற்ற ஆஸ்கர் விருது வென்ற 'The Elephant Whisperers' ஆவணப் பட நாயகர்களான பொம்மன் - பெள்ளி தம்பதியை குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு நேரில் அழைத்து பாராட்டி வாழ்த்து தெரிவித்தார்.

முதுமலை யானைகள் வளர்ப்பு முகாமில் எடுக்கப்பட்ட ஆஸ்கர் விருது பெற்ற ‘The Elephant Whisperers’ ஆவணப் படத்தில் இடம் பெற்ற ரகு எனும் யானைக் குட்டியின் பராமரிப்பாளர்களான பொம்மன் -பெள்ளி தம்பதியினரை நேரில் அழைத்த குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு டெல்லி, குடியரசுத் தலைவர் மாளிகையில் வைத்து அவர்களை பாராட்டி வாழ்த்து தெரிவித்துள்ளார். மேலும், இது தொடர்பான புகைப்படங்கள் குடியரசுத்தலைவரின் ட்விட்டர் பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

  • President Droupadi Murmu felicitated Bomman and Bellie, the protagonists of the Oscar winning documentary 'The Elephant Whisperers' at Rashtrapati Bhavan. The President praised the couple belonging to Kattunayakan tribe for devoting their life in taking care of orphaned baby… pic.twitter.com/Kd4V7BYsL1

    — President of India (@rashtrapatibhvn) July 18, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

நீலகிரி மாவட்டம் முதுமலையைச் சேர்ந்த பொம்மன் - பெள்ளி தம்பதியினர் தாயை பிரிந்த குட்டி யானைகளை பராமரிக்கும் பணியை செய்து வருகின்றனர். இவர்களின் வாழ்வை தழுவி எடுக்கப்பட்ட ‘The Elephant Whisperers’ ஆவணப் படம் ஆஸ்கர் விருது வென்று சாதனை படைத்தது. இதனைத் தொடர்ந்து இந்த படத்தை இயக்கிய கார்த்திகி கோன்சால்வ்ஸ்க்கும், கதாநாயகர்களான பொம்மன் - பெள்ளி தம்பதியினருக்கும் உலக அளவில் பிரபலங்கள், தலைவர்கள் என பலரும் பாராட்டுக்களை தெரிவித்திருந்தனர்.

இதையும் படிங்க: "அதிகாரத்திலோ.. பிரதமர் பதவியிலோ காங்கிரசுக்கு ஆசையில்லை" - மல்லிகார்ஜூன கார்கே!

தாயைப் பிரிந்த குட்டி யானைகளை தங்கள் பிள்ளைபோல் வளர்த்து பராமரிக்கும் பொம்மன் - பெள்ளி தம்பதியினரின் உணர்வுப்பூர்வமான கதையைக் கொண்ட இந்தப் படம் உலக அளவில் மக்கள் மத்தியில் சென்றடைந்தது. ஆனால், இந்த படம் ஆஸ்கர் வென்றபோது அதன் முக்கியத்துவம் கூட அறியாமல் வெகுளியான சிரிப்போடு பொம்மன் - பெள்ளி உலா வந்த நிகழ்வு அனைவரையும் நெகிழ்ச்சிக்கு உள்ளாக்கியது.

இதனைத் தொடர்ந்து தமிழ்நாட்டில் எடுக்கப்பட்ட படம் என்பதாலும், முதுமலை வனப்பகுதியில் எடுக்கப்பட்ட படம் என்பதாலும் இந்த படம் தமிழ்நாட்டிற்கு பெருமை சேர்க்கும் வகையில் அமைந்திருந்தது. இந்த நிலையில், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் படத்தின் பொம்மன் - பெள்ளி தம்பதியினரை நேரில் அழைத்து பாராட்டு தெரிவித்தார்.

மேலும் அவர்களுக்கு தலா ஒரு லட்சம் ரூபாய்க்கான காசோலை வழங்கி வாழ்த்து தெரிவித்திருந்தார். இதனையடுத்து, முதுமலை யானைகள் வளர்ப்பு முகாமிற்கு வருகை தரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்தது என்பதும் குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: 10 வயது சிறுமியை வீட்டு வேலைக்கு பணியமர்த்தி கொடுமை புகார்.. பெண் விமானி, கணவர் கைது!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.