ETV Bharat / bharat

இந்திய எல்லைக்குள் பாக். ட்ரோன் ஊடுருவல் முயற்சி - விரட்டியடித்த வீரர்கள்... - பிஎஸ்எப் வீரர்கள்

பஞ்சாப் சர்வதேச எல்லை வழியாக இந்தியாவுக்குள் போதைப்பொருள் மற்றும் ஆயுதம் கடத்த முயன்ற இரு பாகிஸ்தான் ட்ரோன்களை எல்லைப் பாதுகாப்புப் படை வீரர்கள் சுட்டனர். அப்போது, அது மீண்டும் பாகிஸ்தான் எல்லைக்குள் சென்றது.

ட்ரோன்
ட்ரோன்
author img

By

Published : Dec 19, 2022, 5:00 PM IST

குர்தாஸ்பூர்: பஞ்சாப் குர்தாஸ்பூர் சர்வதேச எல்லைப் பகுதியில், பாகிஸ்தானின் இரு ட்ரோன்கள் அத்துமீறி நுழைய முயற்சித்ததாக கூறப்படுகிறது. இந்திய எல்லைக்குள் பாகிஸ்தான் ட்ரோன்கள் ஊடுருவலைக் கண்டறிந்த ராணுவ வீரர்கள், பிளாஷ் வெடிகுண்டுகள் மற்றும் துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதையடுத்து, அது மீண்டும் பாகிஸ்தான் எல்லைக்குள் சென்றது.

வீரர்களின் துப்பாக்கிச்சூட்டை அடுத்து ட்ரோன் பாகிஸ்தான் எல்லைக்குள் நுழைந்ததாக கூறப்படுகிறது. போதைப்பொருள் மற்றும் ஆயுதக் கடத்தல் மேற்கொள்ள ட்ரோன் இந்திய எல்லையில் ஊடுருவ முயற்சித்திருக்கலாம் என ராணுவ அதிகாரிகள் தெரிவித்தனர்.

மேலும் ட்ரோன் நுழைய முயன்ற பகுதியைக் கண்டறிந்து, பாதுகாப்பு வளையத்திற்குள் கொண்டு வந்து சோதனை மேற்கொண்டுள்ளதாகவும் கடந்த இரு நாட்களில் மூன்றாவது முறையாக பாகிஸ்தானில் இருந்து ட்ரோன் ஊடுருவல் முயற்சி நடந்திருப்பதாகவும் ராணுவ அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதையும் படிங்க: பிரசவ வலியில் துடித்த பெண்ணுக்கு ராணுவ வீரர்கள் செய்த உதவி!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.