ETV Bharat / bharat

ட்ரோன் மூலம் தாக்குதல் நடத்தும் தீவிரவாதிகள் - helicopter gunships

ஜம்மு பகுதியில் அமைந்துள்ள இந்திய விமான படைத்தளத்தில் ட்ரோன் மூலம் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. தொழில்நுட்ப அறையை குறி வைத்து தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இந்த தாக்குதலில் பாகிஸ்தானுக்கு தொடர்பு உள்ளதா என்ற கோணத்தில் விசாரணை நடைபெற்று வரும் நிலையில், ட்ரோன் தொழில்நுட்பத்தில் முதலீடு செய்வது எவ்வளவு முக்கியமோ, அதைப்போல ட்ரோன் எதிர்ப்பு தொழில்நுட்பத்திலும் கவனம் செலுத்த வேண்டியது மிக மிக அவசியம்.

ட்ரோன் மூலம் தாக்குதல் நடத்தும் காஷ்மீர் தீவிரவாதிகள்

author img

By

Published : Jun 29, 2021, 5:32 PM IST

Updated : Jun 29, 2021, 5:41 PM IST

ஆப்கானிஸ்தானில் உள்நாட்டு போர் நடைபெற்ற போது, ஒருதரப்பை சோவியத் யூனியன் ஆதரித்தது. மறுதரப்புக்கு அமெரிக்கா ஆதரவு அளித்தது. அப்போது நடைபெற்ற போரில் சோவியத் யூனியன் வான்வெளி மற்றும் கப்பல் வழி தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதல் சில காலம் கைகொடுத்தாலும் அதன் பின்னர் அமெரிக்க படையை சோவியத் யூனியனால் எதிர்கொள்ள முடியவில்லை. சோவியத் யூனியனின் தாக்குதல் நீடிக்கவில்லை,. அமெரிக்காவின் ஸ்டிங்கர் ஏவுகணை மூலம் பதில் தாக்குதல் நடத்தப்பட்டதை தொடர்ந்து சோவியத் யூனியன் மோசமாக பின்வாங்க நேரிட்டது.

இதேபோல் துருக்கி மற்றும் இஸ்ரேலிய ட்ரோன்களைப் பயன்படுத்தி அஜர்பைஜானால் ஆர்மீனியா தோற்கடிக்கப்பட்டது. இது 21ஆம் நூற்றாண்டில் நடந்தது. இதில் இருந்து இந்தியா பாடம் படித்திருக்க வேண்டும். போரின் தன்மையை மாற்றுவதற்கு விலையுயர்ந்த போர் விமானங்கள் வானத்தை நோக்கி செல்ல வேண்டியதில்லை.

எல்லை தாண்டிய ஹெராயின் வர்த்தகம் மற்றும் இந்திய எல்லைக்குள் ஆயுதங்களை கடத்த ட்ரோன்களை பாகிஸ்தான் பயன்படுத்துகிறது. இந்நிலையில், ஜம்முவில் உள்ள இந்திய விமானப்படை தளத்தில் பாகிஸ்தான் ட்ரோன் மூலம் தாக்குதல் நடத்தியுள்ளது. இந்த தாக்குதல் மாற்றத்திற்கான எச்சரிக்கை. ட்ரோன் தாக்குதல்களை நிர்வகிக்க வேண்டிய அவசியமில்லை. இதனை கையாள்வது எளிதான செயல். பாகிஸ்தானின் இரகசிய நடவடிக்கைக்கு இது மிகவும் உதவிகரமாக அமையும்.

ட்ரோன் மூலம் தாக்குதல்
ட்ரோன் மூலம் தாக்குதல்

ட்ரோன் தாக்குதல்களுக்கு எதிரான பாதுகாப்புக்கு ரேடார், ரேடியோ ரிசீவர்கள், ஆப்டிகல் சென்சார்கள் மற்றும் மென்பொருள் மூலம் இயங்கும் தன்னாட்சி ஆயுத அமைப்புகளுடன் இணைக்கப்பட்ட ஆடியோ சென்சார்கள் ஆகியவற்றை ஒருங்கிணைக்கும் விரிவான மின்னணு டிராக்கர் அமைப்புகள் தேவைப்படும். மின்காந்த துடிப்பு, மைக்ரோவேவ் மற்றும் சோனிக் பூம் துப்பாக்கிகள் கூட ட்ரோனை முடக்க பயன்படுத்தலாம்.

இருப்பினும், இந்த ட்ரோன் எதிர்ப்பு தொழில்நுட்பங்களில் பெரும்பாலானவை ஆரம்ப கட்டத்தில் உள்ளன. இராணுவ தளங்கள் மற்றும் சொத்துக்களைப் பாதுகாக்க பெரிய அளவிலான உற்பத்தி மற்றும் ஒருங்கிணைப்பு ஏற்படுத்தப்படவில்லை.

ட்ரோன் மூலம் தாக்குதல்
ட்ரோன் மூலம் தாக்குதல்

உலகில் உள்ள மல்டி ரோல் ராணுவ ட்ரோன்களை விட, தீவிரவாதிகளுக்கு சக்தி வாய்ந்த ட்ரோன்கள் சந்தையில் எளிதாக கிடைக்கிறது. இதனை பாதுகாப்பான இடத்தில் இருந்து குறிப்பிட்ட தூரத்தை திட்டமிட்டு தாக்குதல் நடத்தி அழிவை உண்டாக்க முடியும்.

சிக்கலான பகுதிகளில் ட்ரோன்கள் விற்பனை செய்வதற்கு கட்டுப்பாடுகள் அவசியம். ட்ரோன் விற்பனையில் தனியார், தனிநபர்கள் நிறுவனங்களுக்கும் கட்டுப்பாடு அவசியம். தனிநபர்கள் அவற்றை வாங்கினாலும், அதன் கொள்முதல் மற்றும் பயன்பாட்டிற்கு அரசாங்கத்தால் உரிமம் வழங்கப்படும் நடைமுறை இருக்க வேண்டும். இது தவறான பயன்பாட்டை சரிபார்க்க கண்காணிக்க உதவும்.

ட்ரோன் தொழில்நுட்பத்தில் முதலீடு செய்வது போர்க்கள நன்மைக்கு எவ்வுளவு முக்கியமோ, அதைப்போல ட்ரோன் எதிர்ப்பு தொழில்நுட்பத்திலும் கவனம் செலுத்த வேண்டியது மிக மிக அவசியம்.

Last Updated : Jun 29, 2021, 5:41 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.