ETV Bharat / bharat

எந்த சக்தியாலும் தடுக்க முடியாது - கொட்டும் மழையில் ராகுல் காந்தி உரை - தேச ஒற்றுமை நடைப்பயணம்

கர்நாடகாவின் மைசூருவில் கொட்டும் மழையில் பொதுக் கூட்டத்தில் பேசிய ராகுல் காந்தி, “பாஜக-ஆர்எஸ்எஸ் பரப்பிவரும் வெறுப்பு மற்றும் வன்முறை அரசியலை தடுக்கும் நோக்குடன் நடத்தப்படும் பாரத் ஜோடோ யாத்திரையை எந்த சக்தியாலும் தடுக்க முடியாது என்று தெரிவித்தார்.

Rahul Gandhi says nothing can stop Bharat Jodo Yatra

author img

By

Published : Oct 3, 2022, 7:47 AM IST

Updated : Oct 3, 2022, 12:00 PM IST

பெங்களூரு: காங்கிரஸ் கட்சியை வலுப்படுத்தவும், அக்கட்சியின் தொண்டர்களிடையே எழுச்சியை ஏற்படுத்தவும் காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி பாரத் ஜோடோ யாத்திரைத்தில் (தேச ஒற்றுமை நடைப்பயணம்) ஈடுபட்டுள்ளார். கன்னியாகுமரியில் இருந்து காஷ்மீர் வரை நடைபயணம் மேற்கொள்கிறார். இந்த நடைப்பயணம் தமிழ்நாடு, கேரளாவை தொடர்ந்து கர்நாடகாவில் நடந்துவருகிறது. அந்த வகையில் நேற்று (அக். 2) காந்தி ஜெயந்தியை முன்னிட்டு மைசூருவில் ஏற்பாடு செய்யப்பட்ட பொதுக்கூட்டத்தில் ராகுல் காந்தி உரையாற்றினார்.

கொட்டும் மழையில் ராகுல் காந்தி உரை

இதனிடையே மழை பெய்தது. இருப்பினும் உரையை நிறுத்தாமல் தொடர்ந்தார். அப்போது அவர், இந்த நடைப்பயணம் கன்னியாகுமரியிலிருந்து காஷ்மீர் வரை தொடரும், ஒருபோதும் நிறுத்தப்படாது. புயலோ, மழையோ, வெயிலோ, குளிரோ இந்த நடைப்பயணத்தை நிறுத்த முடியாது. பாஜக-ஆர்எஸ்எஸ்ஸால் பரப்பிவரும் வெறுப்பு மற்றும் வன்முறையைத் தடுக்கும் நோக்கத்தில் தொடங்கப்பட்ட இந்த நடைப்பயணத்தை எந்த சக்தியாலும் தடுக்க முடியாது.

மகாத்மா காந்தி பிரிட்டிஷ் அரசாங்கத்தை எதிர்த்துப் போராடியது போல், காந்தியைக் கொன்ற சித்தாந்தத்துடன் நாம் போராடிகொண்டிருக்கிறோம். இந்த சித்தாந்தம் கடந்த 8 ஆண்டுகளில் சமத்துவமின்மை, பிரிவினை கொடுத்துள்ளது. அதனை இந்த நடைப்பயணம் ஒன்றிணைக்கும் என்று தெரிவித்தார்.

இதையும் படிங்க: 3 ஆண்டுகளில் 7.4 கோடி ஊரக வீடுகளுக்கு குடிநீர் இணைப்பு - திரௌபதி முர்மு

Last Updated : Oct 3, 2022, 12:00 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.