ETV Bharat / bharat

டிஆர்டிஓ உளவு வழக்கு: குற்றஞ்சாட்டப்பட்டவர்களிடம் பேசிய அடையாளம் தெரியாத பெண்

ஒடிசாவில் உள்ள ஒருங்கிணைந்த சோதனை மையத்தை உளவு பார்த்த வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட ஐந்து பேரிடமும் அடையாளம் தெரியாத பெண் ஒருவர் தொடர்புகொண்டுள்ளதாக காவல் துறை விசாரணையில் தெரியவந்துள்ளது.

டிஆர்டிஓ உளவு வழக்கு
டிஆர்டிஓ உளவு வழக்கு
author img

By

Published : Sep 27, 2021, 10:18 AM IST

ஒடிசா: பாலசோர் மாவட்டத்திலுள்ள பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பின் (DRDO) ஒருங்கிணைந்த சோதனை மையத்தைப் பணியாற்றி ஐந்து ஊழியர்களை செப்டம்பர் 14, 16 ஆகிய தேதிகளில் பாகிஸ்தானிய உளவாளிக்குப் பணத்திற்காக முக்கியத் தகவல்களைத் தெரிவித்ததாகக் கைதுசெய்யப்பட்டனர்.

இதையடுத்து, உளவு பார்த்த வழக்கில் ஐந்து பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். இதையடுத்து, ஐந்து பேரையும் குற்றப்பிரிவு காவல் துறையினர் ஏழு நாள் காவலில் எடுத்து விசாரணை நடத்தினர்.

இந்த விசாரணை சனிக்கிழமை (செப். 25) முடிவடைந்த நிலையில் அவர்கள் தற்போது நீதிமன்ற காவலுக்கு அனுப்பப்படவுள்ளனர். இது குறித்து குற்றப்பிரிவு கூடுதல் இயக்குநர் சஞ்ஜீப் பாண்டா கூறியதாவது, “குற்றஞ்சாட்டப்பட்ட ஐந்து பேருடனும், பாலசோரைச் சேர்ந்தவர் எனக் கூறி பொய்யாக ஒரு பெண் பேசிவந்துள்ளார்.

கணொலி வாயிலாகப் பேசிய பெண்

ஒருவருக்கொருவர் தெரியாமல், பேசியுள்ளார். அவர் ஏழு ஃபேஸ்புக் கணக்குகளை வெவ்வேறு பெயர்களில் பயன்படுத்திவந்துள்ளார். குற்றஞ்சாட்டப்பட்ட இருவரிடம் அப்பெண் அடிக்கடி காணொலி வாயிலாகப் பேசிவந்துள்ளார்.

அவர்களிடம் திருமணம் செய்துகொள்ளும்படியும் கேட்டுக்கொண்டுள்ளார். குற்றஞ்சாட்டப்பட்டவர்களில் ஒருவரை சந்திப்பூரிலுள்ள தனது இல்லத்திற்கு வருமாறு அழைப்பும் விடுத்திருக்கிறார்" எனத் தெரிவித்தார்.

காவல் துறை விசாரணை

இந்நிலையில், குற்றப்பிரிவு காவல் துறையினர், அப்பெண் பயன்படுத்தும் இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த தொலைபேசி எண், துபாயிலுள்ள வங்கிக் கணக்கு விவரங்களை வைத்து விசாரித்துவருகின்றனர்.

மேலும், குற்றஞ்சாட்டப்பட்டவர்களில் ஒருவர் அப்பெண்ணிற்கு இரண்டு தவணையாக சுமார் 38 ஆயிரம் ரூபாய் கொடுத்துள்ளதும் விசாரணையில் தெரியவந்துள்ளது. அப்பெண் யார் என்பது குறித்து தெரியவந்ததுடன் அவர் குறித்த தெளிவான விளக்கங்கள் அளிப்பதாக காவல் துறைத் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: இந்தியப் பெண் விமானப்படை அலுவலருக்குப் பாலியல் வன்கொடுமை செய்த விமானப்படை அலுவலர் கைது

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.