டெல்லி: பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பின் (டிஆர்டிஓ) தலைவர் ஜி. சதீஷ் ரெட்டி விஞ்ஞானிகளிடம் அறிவுறுத்தியுள்ளார்.
சைபர் பாதுகாப்பு, விண்வெளி மற்றும் செயற்கை நுண்ணறிவு உள்ளிட்ட அடுத்த தலைமுறை தேவைகளில் கவனம் செலுத்துமாறு அவர் கேட்டுக்கொண்டுள்ளார். உள் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கையும் சந்தித்த சதீஷ், அவருக்கு ஆகாஷ் ஏவுகணை அமைப்பின் மாதிரியை வழங்கினார். இது சமீபத்தில் ஏற்றுமதிக்கு அனுமதிக்கப்பட்ட ஏவுகணை என்பது குறிப்பிடத்தக்கது.
“டிஆர்டிஓ பல அதிநவீன ராணுவ தொழில்நுட்ப சாதனங்களை தயாரித்து வருகிறது. இதில் ஏரோநாட்டிக்ஸ், ஆயுதங்கள், போர் வாகனங்கள், மின்னணுவியல் கருவி, பொறியியல் அமைப்புகள், ஏவுகணைகள், கடற்படை அமைப்புகள், மேம்பட்ட கணினி, உருவகப்படுத்துதல், சைபர், வாழ்க்கை அறிவியல் மற்றும் பாதுகாப்புக்கான பிற தொழில்நுட்பங்கள் ஆகியவை அடங்கும்” என ஜி. சதீஷ் ரெட்டி தெரிவித்திருக்கிறார்.
கடற்படையில் ஐ.என்.எஸ் விக்ரமாதித்யாவின் முதல் தரையிறக்கம், ஹைப்பர்சோனிக் தொழில்நுட்ப வாகனம், குவாண்டம் தொழில்நுட்ப விநியோகம், லேசர் வழிகாட்டப்பட்ட எதிர்ப்பு ஏவுகணை போன்ற பல மைல்கற்களை டிஆர்டிஓ எட்டியுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.