ETV Bharat / bharat

இந்தியா வரும் ரஷ்யத் தடுப்பூசி ஸ்புட்னிக்-வி! - ஸ்புட்னிக் வி

ரஷ்யாவின் கரோனா தடுப்பூசியான ஸ்புட்னிக்-வி மே 1ஆம் தேதி இந்தியாவுக்கு வந்து சேரும் என, மத்திய அரசு தகவல் தெரிவித்துள்ளது.

ஸ்புட்னிக் வி
ஸ்புட்னிக் வி
author img

By

Published : Apr 27, 2021, 6:52 PM IST

டெல்லி: ஸ்புட்னிக்-வி தடுப்பூசியை இந்தியாவில் அவசரக்கால பயன்பாட்டுக்குப் பயன்படுத்த மத்திய அரசுக்கு நிபுணர் குழு பரிந்துரை அளித்திருந்தது.

இந்தப் பரிந்துரையை ஏற்ற மத்திய அரசு, இந்தியாவில் 3ஆவது கரோனா தடுப்பூசியாக ஸ்புட்னிக்-வி ஐை பயன்பாட்டுக்குக் கொண்டு வருகிறது. ரஷ்யாவில் மட்டுமே இந்த தடுப்பூசி தயாரிக்கப்படுகிறது. உலகம் முழுக்க 59 நாடுகள் இந்தத் தடுப்பூசியைப் பயன்படுத்தி வருகின்றன.

கரோனாவை தடுப்பதில் 91.6 விழுக்காடு அளவுக்கு இந்தத் தடுப்பூசி திறன் வாய்ந்தது எனக் கூறப்படுகிறது. மேலும் 2 முதல் 8 டிகிரி செல்சியஸ் வெப்ப நிலையில் இந்தத் தடுப்பூசியை வைத்திருந்து பயன்படுத்த முடியும்.

ஸ்புட்னிக்-வி தடுப்பூசியை இந்தியாவில் தயாரித்து விநியோகிக்கும் பொறுப்பை ஐதராபாத்தில் உள்ள டாக்டர் ரெட்டீஸ் மருந்து நிறுவனம் பெற்றுள்ளது. இந்த நிறுவனம் ரஷ்யாவில் இருந்து முதல் கட்டமாக ஸ்புட்னிக்-வி தடுப்பூசியை இறக்குமதி செய்து தருவதாகக் கூறியுள்ளது.

ஸ்புட்னிக் வி தடுப்பூசியின் முதல் தொகுதி மே 1ஆம் தேதி இந்தியாவுக்குக் கிடைக்கும் என, ரஷ்ய நாட்டின் தலைமை பொறுப்பில் உள்ள கிரில் டிமிட்ரிவ் தெரிவித்துள்ளார். இருப்பினும், முதல் தொகுதியில் எத்தனை தடுப்பூசிகள் இருக்கும் என்று அவர் குறிப்பிடவில்லை.

கரோனா பாதிப்புகளைத் தடுக்க இந்தியாவில் அவசரக்கால தேவைக்காகத் தடுப்பூசிகளைப் பயன்படுத்திக் கொள்ள மத்திய அரசு அனுமதி வழங்கியது. இதன்படி, ஜனவரி 16ந்தேதி முதல் நாட்டு மக்களுக்குத் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு வருகின்றன.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.