ETV Bharat / bharat

அம்பானி வீட்டு விருந்தில் கரன்சி நோட்டுடன் உணவு பரிமாறப்பட்டது ஏன் தெரியுமா? - நீடா அம்பானி பல்துறை கலாச்சார மையம்

அம்பானி வீட்டு விருந்து நிகழ்ச்சியில் கரன்சி நோட்டுக்களுடன் உணவு பரிமாறப்பட்ட புகைப்படங்கள் இணையத்தில் வைரலான நிலையில், அவை போலி ரூபாய் நோட்டுக்கள் என்றும், கவர்ச்சிக்காக வைக்கப்பட்டதாகவும் தெரியவந்துள்ளது.

know
அம்பானி
author img

By

Published : Apr 3, 2023, 7:17 PM IST

ஹைதராபாத்: மும்பையில் நீடா அம்பானியின் பிரமாண்டமான பல்துறை கலாசார மையம் கடந்த மார்ச் 31ஆம் தேதி திறக்கப்பட்டது. இது இந்தியாவின் முதல் பல்துறை கலாசார மையம் என்று கூறப்படுகிறது. இதில், இசை, நாடகம், கைவினைப் பொருட்கள் உள்ளிட்ட நாட்டின் சிறந்த கலை, கலாசாரங்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. இந்த மையத்தில் குழந்தைகள், மாணவர்கள், மூத்த குடிமக்கள், மாற்றுத்திறனாளிகளுக்கு அனுமதி இலவசம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த கலாசார மையம் திறக்கப்பட்டது முதல் மூன்று நாட்களுக்குப் பல்வேறு கொண்டாட்டங்கள் நடைபெற்றன. அதில் குறிப்பாக அரசியல் பிரபலங்கள், திரை நட்சத்திரங்கள் உள்ளிட்டோர்களுக்காக விருந்து நிகழ்ச்சி நடைபெற்றது. கோலாகலமாக நடைபெற்ற இந்த இரவு விருந்தில், ரஜினிகாந்த், ஷாருக்கான், சல்மான்கான், அமீர்கான், தீபிகா படுகோன், பிரியங்கா சோப்ரா உள்ளிட்ட இந்திய திரைப் பிரபலங்களும், டாம் ஹாலண்ட், ஜெண்டயா உள்ளிட்ட ஹாலிவுட் முன்னணி நட்சத்திரங்களும் கலந்து கொண்டனர்.

இந்த விருந்து நிகழ்ச்சியில் பல்வேறு வகையான உணவுகள் வெள்ளித்தட்டுகளில் வைத்து பரிமாறப்பட்டன. இந்த விருந்து தொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகின. அதில், குறிப்பாக ஒரு இனிப்பின் புகைப்படம் பலரது கவனத்தையும் ஈர்த்தது. அதற்குக் காரணம் அந்த இனிப்பு ரூபாய் நோட்டுகளுடன் பரிமாறப்பட்டிருந்தது. அந்த உணவில் எதற்காக ரூபாய் நோட்டுக்களை வைத்திருக்கிறார்கள்? எனப் பலரும் கேள்வி எழுப்பினர்.

இந்த நிலையில், அது உண்மையான ரூபாய் நோட்டுகள் இல்லை எனத் தெரியவந்துள்ளது. அந்த இனிப்பின் பெயர் Daulat ki chaat. இது டெல்லியில் மிகவும் பிரபலமான ஒரு இனிப்பு வகை. கன்டென்ஸ்டு மில்க், கோவா, பிஸ்தா உள்ளிட்டவற்றால் செய்யப்படும் இனிப்பு இது. இதனை டெல்லியில் உள்ள ஒரு உணவகம் போலி ரூபாய் நோட்டுக்களுடன் பரிமாறி வருகிறது. அதன்படியே, அம்பானி வீட்டு விருந்து நிகழ்ச்சியிலும் இந்த இனிப்பு ரூபாய் நோட்டுக்களுடன் பரிமாறப்பட்டதாகத் தெரிகிறது. இது தொடர்பான புகைப்படங்களை சமூக வலைதளங்களில் பகிர்ந்துவரும் நெட்டிசன்கள் அவை போலியான ரூபாய் நோட்டுக்கள் என்றும் கமென்ட் செய்து வருகின்றனர்.

இதையும் படிங்க: ''ஸ்பைடர் மேன்'' பட நட்சத்திரங்கள் மும்பை வருகை - இணையத்தில் புகைப்படங்கள் வைரல்!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.