டெல்லி: சொத்துக்குவிப்பு வழக்கில் முன்னாள் அமைச்சர் பொன்முடி மற்றும் அவரது மனைவி விசாலாட்சி பொன்முடிக்கு மூன்று ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து, கடந்த ஆண்டு டிசம்பர் 21ஆம் தேதி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.
அதேநேரத்தில் சிறை தண்டனையை எதிர்த்து மேல்முறையீடு செய்ய வசதியாக 30 நாட்கள் அவகாசம் வழங்கப்பட்டது. இந்நிலையில், சென்னை உயர் நீதிமன்ற உத்தரவை எதிர்த்து, பொன்முடி தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
அந்த மனுவில், சிறை தண்டனையை நிறுத்தி வைக்க உத்தரவிட வேண்டும், தண்டனையை முழுவதுமாக ரத்து செய்ய வேண்டும் என கூறப்பட்டுள்ளது. இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரும் எனத் தெரிகிறது.
இதையும் படிங்க: அமைச்சர் பொன்முடிக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதிப்பு..!