பெங்களூரு: கர்நாடகாவில் முதலமைச்சர் சித்தராமையா தலைமையிலான காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், காவிரி, மேகதாது மற்றும் மகாதாயி நீர் பிரச்னைகள் தொடர்பாக இன்று (ஆகஸ்ட் 23) அம்மாநில முதலமைச்சர் சித்தராமையா தலைமையில் அனைத்துக் கட்சி கூட்டம் நடைபெற்றது. விதான் சவுதாவில் உள்ள ஆலோசனை அரங்கில் நடைபெற்ற இந்த கூட்டத்தில், அம்மாநில துணை முதலமைச்சர் டிகே சிவகுமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
இதனைத் தொடர்ந்து வழக்கறிஞர் ஜெனரல் சசிகிரண் ஷெட்டி கூறுகையில், “கர்நாடகா மற்றும் கேரளா எல்லையில் உள்ள காவிரி பள்ளத்தாக்கில் பொழிய வேண்டிய தென்மேற்கு பருவமழை சரியாக பெய்யாததால் 2023 - 2024 ஆண்டு கடினமான ஆண்டாக இருக்கும். காவிரி நீர் கட்டுப்பாட்டு கமிட்டி ஜூன் வரையில் பெய்யாத மழையின் அளவை கவனித்து உள்ளது. கடந்த ஆகஸ்ட் 10 அன்று கர்நாடகாவில் இருந்து தமிழ்நாட்டுக்கு 15 ஆயிரம் கன அடி நீர் திறந்து விடப்பட்டது.
இதனை கர்நாடகா கடுமையாக எதிர்த்தது. இதனையடுத்து 10 ஆயிரம் கன அடியாக குறைக்கப்பட்டது. இதனால் வேதனை அடைந்த தமிழ்நாடு, இந்த விவகாரம் தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தது. இது தொடர்பான விசாரணை வெள்ளிக்கிழமை உச்ச நீதிமன்ற நீதிபதிகள் 3 பேர் கொண்ட அமர்வின் முன்பு வர உள்ளது” என தெரிவித்தார்.
இந்த அனைத்துக் கட்சி கூட்டம் தொடங்குவதற்கு முன்னதாக கர்நாடக துணை முதலமைச்சரும், நீர்வளத்துறை அமைச்சருமான டிகே சிவகுமார் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், “பாசனம் தொடர்பான விவகாரத்தில் கர்நாடகாவின் பாதுகாப்பில் எந்த வித சமரசத்துக்கும் இடமில்லை. அரசின் சட்ட ரீதியான போராட்டம் தொடரும். இது தொடர்பாக அனைத்துக் கட்சி சார்ந்த தலைவர்களும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும்” என தெரிவித்தார்.
-
ಕಾವೇರಿ ಹಾಗೂ ಮಹದಾಯಿ ಜಲ ವಿವಾದಗಳಿಗೆ ಸಂಬಂಧಿಸಿದಂತೆ ವಿಧಾನಸೌಧದಲ್ಲಿ ಇಂದು ಸರ್ವಪಕ್ಷಗಳ ಮುಖಂಡರು ಹಾಗೂ ಸಂಸತ್ ಸದಸ್ಯರ ಸಭೆ ನಡೆಯುತ್ತಿದ್ದು ನಮ್ಮ ರೈತರ ಹಿತರಕ್ಷಣೆಗಾಗಿ ಸೂಕ್ತ ನಿರ್ಧಾರಗಳನ್ನು ಕೈಗೊಳ್ಳಲಾಗುತ್ತಿದೆ. ಈ ವರ್ಷ ಸರಿಯಾದ ಪ್ರಮಾಣದಲ್ಲಿ ಮಳೆಯಾಗದ ಕಾರಣ ನಮ್ಮ ರಾಜ್ಯದ ಅನ್ನದಾತರ ಹಿತರಕ್ಷಣೆಗಾಗಿ ಯಾವ ರೀತಿ ಮುಂದಿನ ಹೆಜ್ಜೆ… pic.twitter.com/uUFp2cxg3y
— DK Shivakumar (@DKShivakumar) August 23, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data="
">ಕಾವೇರಿ ಹಾಗೂ ಮಹದಾಯಿ ಜಲ ವಿವಾದಗಳಿಗೆ ಸಂಬಂಧಿಸಿದಂತೆ ವಿಧಾನಸೌಧದಲ್ಲಿ ಇಂದು ಸರ್ವಪಕ್ಷಗಳ ಮುಖಂಡರು ಹಾಗೂ ಸಂಸತ್ ಸದಸ್ಯರ ಸಭೆ ನಡೆಯುತ್ತಿದ್ದು ನಮ್ಮ ರೈತರ ಹಿತರಕ್ಷಣೆಗಾಗಿ ಸೂಕ್ತ ನಿರ್ಧಾರಗಳನ್ನು ಕೈಗೊಳ್ಳಲಾಗುತ್ತಿದೆ. ಈ ವರ್ಷ ಸರಿಯಾದ ಪ್ರಮಾಣದಲ್ಲಿ ಮಳೆಯಾಗದ ಕಾರಣ ನಮ್ಮ ರಾಜ್ಯದ ಅನ್ನದಾತರ ಹಿತರಕ್ಷಣೆಗಾಗಿ ಯಾವ ರೀತಿ ಮುಂದಿನ ಹೆಜ್ಜೆ… pic.twitter.com/uUFp2cxg3y
— DK Shivakumar (@DKShivakumar) August 23, 2023ಕಾವೇರಿ ಹಾಗೂ ಮಹದಾಯಿ ಜಲ ವಿವಾದಗಳಿಗೆ ಸಂಬಂಧಿಸಿದಂತೆ ವಿಧಾನಸೌಧದಲ್ಲಿ ಇಂದು ಸರ್ವಪಕ್ಷಗಳ ಮುಖಂಡರು ಹಾಗೂ ಸಂಸತ್ ಸದಸ್ಯರ ಸಭೆ ನಡೆಯುತ್ತಿದ್ದು ನಮ್ಮ ರೈತರ ಹಿತರಕ್ಷಣೆಗಾಗಿ ಸೂಕ್ತ ನಿರ್ಧಾರಗಳನ್ನು ಕೈಗೊಳ್ಳಲಾಗುತ್ತಿದೆ. ಈ ವರ್ಷ ಸರಿಯಾದ ಪ್ರಮಾಣದಲ್ಲಿ ಮಳೆಯಾಗದ ಕಾರಣ ನಮ್ಮ ರಾಜ್ಯದ ಅನ್ನದಾತರ ಹಿತರಕ್ಷಣೆಗಾಗಿ ಯಾವ ರೀತಿ ಮುಂದಿನ ಹೆಜ್ಜೆ… pic.twitter.com/uUFp2cxg3y
— DK Shivakumar (@DKShivakumar) August 23, 2023
இந்த கூட்டத்தில் முன்னாள் முதலமைச்சர்கள் பிஎஸ் எடியூரப்பா, டிவி சதானந்த கவுடா, காங்கிரஸ் தலைவர் வீரப்பா மொய்லி, நாடாளுமன்ற உறுப்பினர்கள் சுமலதா, ஜகேஷ், டாக்டர் ஹனுமன்தயா, முனிசுவாமி, ஜிஎம் சித்தேஸ்வர், சட்டமன்ற உறுப்பினர் புட்டானையா ஆகியோர் கர்நாடகாவின் சட்டப் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து உள்ளனர்.
மேலும், இந்த கூட்டத்தில் முன்னாள் முதலமைச்சர்கள் பசவராஜ் பொம்மை, ஹெடி குமாரசுவாமி, ஜெகதீஷ் ஷெட்டர், அமைச்சர்கள் ஹெகே படில், சாலுவரயசுவாமி, ஜி பரமேஷ்வரா, கேஜே ஜார்ஜ் மற்றும் கிருஷ்ணா பியர் கவுடா ஆகியோர் கலந்து கொண்டனர்.
இதையும் படிங்க: காவிரி நீரை தமிழகத்திற்கு திறந்துவிட எதிர்ப்பு - கர்நாடக விவசாயிகள் போராட்டம்!