ETV Bharat / bharat

பிகாரில் மருத்துவர் கொலை: இளைஞர் கைது!

பீகார்: நோயாளிக்கு முறையான சிகிச்சை அளிக்காத மருத்துவரைக் கொலைசெய்த வழக்கில் இளைஞர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

Doctor stabbed to death in Bihar  Doctor killed by patient's relative  attack on doctors  lack of proper treatment in hospital  பீகாரில் மருத்துவர் கொலை  பீகாரில் மருத்துவரை கொலைச் செய்த இளைஞர் கைது
Doctor stabbed to death in Bihar
author img

By

Published : Dec 7, 2020, 9:14 AM IST

பிகார் மாநிலம் நலந்தா மாவட்டத்தைச் சேர்ந்தவர் மருத்துவர் விஜயகுமார் (35). இவர் சொந்தமாக கிளினிக் நடத்திவந்தார். இவரை நேற்று (டிச. 07) மாலை 6.30 மணியளவில் சன்னிகுமார் (27) என்ற இளைஞர் கத்தியால் குத்தியுள்ளார்.

அப்போது, அவர் வலி தாங்க முடியாமல் சத்தம் போட்டுள்ளார். அவரது அலறல் சத்தம் கேட்டு அங்கு வந்த அப்பகுதியினர் அந்த இளைஞரிடமிருந்து அவரைக் காப்பாற்ற முயன்றுள்ளனர். ஆனால், மருத்துவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

பின்னர் அந்த இளைஞரை அப்பகுதியினர் மடக்கிப்பிடித்து காவல் துறையினரிடம் ஒப்படைத்தனர். இது குறித்து காவல் துறையினர் வழக்குப்பதிந்து சன்னிகுமாரைக் கைதுசெய்து விசாரணை நடத்தினர்.

விசாரணையில், கடந்த மாதம் சன்னிகுமாரின் மாமாவிற்கு உடல்நலக்குறைவு ஏற்பட்ட நிலையில் விஜயகுமாரின் கிளினிக்கிற்கு சிகிச்சைக்காக அழைத்துச் சென்றதும், ஆனால் சிகிச்சை பெற்றபின் அவரது மாமா குணமாகாததால் ஆத்திரத்தில் கத்தியால் குத்திக் கொலைசெய்ததும் தெரியவந்தது.

மேலும் நோயாளி குணமாகாததால் மருத்துவரை கொலைசெய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க: தாயை இரும்பு கம்பியால் அடித்த மகன்கள்! - மனமுடைந்து தாய் தற்கொலை!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.