ETV Bharat / bharat

Naatu Naatu song: "நாட்டு நாட்டு" பாடலுக்கு ஆஸ்கர் விருது!

ராஜமவுலி இயக்கத்தில் கடந்த ஆண்டு வெளிவந்த ஆர் ஆர் ஆர் படத்தின் நாட்டு நாட்டு பாடலுக்கு சிறந்த ஒரிஜினல் பாடலுக்கான ஆஸ்கர் விருது வழங்கப்பட்டு உள்ளது.

Etv Bharat
Etv Bharat
author img

By

Published : Mar 13, 2023, 8:40 AM IST

Updated : Mar 13, 2023, 2:25 PM IST

வாஷிங்டன்: 95-வது ஆஸ்கர் விருது விழா அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடைபெற்று வருகிறது. ஒட்டுமொத்த உலகின் கவனத்தையும் ஈர்த்துள்ள இந்த விழாவில், விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றன. நடிகை தீபிகா படுகோன் விருது வழங்கும் கமிட்டியில் உறுப்பினராக உள்ளார். மேலும் விழாவில் இயக்குநர் ராஜமவுலி, ராம்சரண், ஜூனியர் என்டிஆர் உள்ளிட்ட பல்வேறு நட்சத்திரங்கள் கலந்து கொண்டு சிவப்பு கம்பள விரிப்பு அலங்கரித்தனர்.

இதில் ‘ஆர் ஆர் ஆர்’ படத்தின் ‘‘நாட்டு நாட்டு’’ பாடலுக்கு சிறந்த ஒரிஜினல் பாடலுக்கான விருது வழங்கப்பட்டது. இயக்குநர் ராஜமவுலி இயக்கத்தில், ராம் சரண், ஜூனியர் என்.டி.ஆர், ஆலியா பட், ஸ்ரேயா, அஜய் தேவ்கன் உள்ளிட்ட பல்வேறு நட்சத்திரங்கள் நடித்த ஆர் ஆர் ஆர் திரைப்படம் கடந்த ஆண்டு மார்ச் திரைக்கு வந்தது. சுதந்திர போராட்டத்தை கதைக் களமாக கொண்ட இந்த படம், சுதந்திர போராட்ட வீரர்களான சீதாராம ராஜு, கொமரம் பீம் ஆகியோரின் நட்பை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்டது.

இந்த படத்துக்கு கீரவாணி இசை அமைத்து இருந்தார். பாடலாசிரியர் சந்திரபோஸ் பாடகளை எழுதி இருந்தார். கலவையான விமர்சனங்களை இந்த படம் பெற்று இருந்தாலும், பாடல்கள் மற்றும் கதைக் களம் பெருவாரியான மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இந்த படத்தில் உள்ள ‘நாட்டு நாட்டு’ பாடல் பட்டித் தொட்டி எங்கும் பரவி பலரின் பற்களுக்கு இடையே எந்நேரமும் அசைபடும் பாடலாய் மாறியது.

இந்த ‘நாட்டு நாட்டு’ பாடலுக்கு கோல்டன் குளோப் விருது விழாவில் சிறந்த பாடலுக்கான விருது வழங்கப்பட்டது. பல்வேறு விருதுகளைப் பெற்று வரும் இப்படம் ஆஸ்கர் விருதுக்கும் பரிந்துரைக்கப்பட்டது. தற்போது, ‘ஆர் ஆர் ஆர்’ படத்தின் ‘‘நாட்டு நாட்டு’’ பாடலுக்கு ஆஸ்கர் விருது கிடைத்துள்ளது. சிறந்த ஒரிஜனல் பாடல் பிரிவில் இந்த பாடலுக்கு ஆஸ்கர் விருது வழங்கப்பட்டது. இசையமைப்பாளர் கீரவாணி, பாடலாசிரியர் சந்திரபோஸ் ஆகியோர் ஆஸ்கர் விருதை பெற்றுக் கொண்டனர்.

Etv Bharat
Etv Bharat

இருவரும் விருது வாங்கும் போது ‘ஆர் ஆர் ஆர்’ படத்தின் இயக்குநர் ராஜமவுலி, நடிகர்கள் ராம் சரண், ஜூனியர் என்.டி.ஆர் உள்ளிட்ட படக் குழுவினர் உற்சாகம் அடைந்தனர். விருது வென்ற இசையமைப்பாளர் கீரவாணி பேசும்போது, ராஜமவுலிக்கு பாட்டு பாடிய படியே நன்றி தெரிவித்தார். மேலும் ஆர் ஆர் ஆர் இந்தியாவின் பெருமை என்றும் குறிப்பிட்டார்.

முன்னதாக, ஆஸ்கர் விருது விழாவில் ‘நாட்டு நாட்டு’ பாடல் சிறப்பு பாடலாக ஒலிக்கப்பட்டது. பாடலை ராகுல் சிப்லிகுஞ்-சும், கால பைரவாவும் நேரலையில் பாடினர். ஆஸ்கர் விருது மேடையில் ‘நாட்டு நாட்டு’ பாடலுக்கு அமெரிக்க நடன கலைஞர்கள் லாரன் காட்லீப் (Lauren Gottlie) மற்றும் குழுவினர் உற்சாகமாக நடனமாடினார். பாடலின் போது விழாவில் கலந்து கொண்ட நடிகர், நடிகைகள், கலைஞர்கள் ரசித்து மகிழ்ந்தனர்.

இதையும் படிங்க: The Elephant Whisperers: தி எலிபெண்ட் விஸ்பரர்ஸ் படத்திற்கு ஆஸ்கர் விருது..!

Last Updated : Mar 13, 2023, 2:25 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.