ஹைதராபாத்: தமிழ் மற்றும் மலையாள சினிமாவில் பிரமேம், நேரம் போன்ற திரைப்படங்கள் மூலம் பிரபலமானவர் இயக்குநர் அல்போன்சு புத்ரன். வாழ்க்கையில் நடைபெறும் வாழ்வியல் தருணங்களை அனைத்து வயதினரையும் கவரும் வகையில், திரையில் எதார்த்தமாகக் கொடுக்கும் அல்போன்சின் ஸ்டைலுக்கு தனி ரசிகர் பட்டாலாமே உண்டு.
சமீபத்தில் இயக்குநர் அல்போன்சு சினிமாவிற்கு ரெஸ்ட் கொடுப்பதாக அறிவித்தார் என்ற செய்திகள் வெளிவந்தது. இதைத்தொடர்ந்து தற்போது, மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு சமூக வலைத்தளம் மூலம் கடிதம் எழுதியுள்ளார். அந்தக் கடிதத்தில் இயக்குநர் அல்போன்சு நிர்மலா சீதாராமனிடம் நேருக்கு நேர் சில கேள்விகளை எழுப்பி சமூக வலைத்தளத்தையே மிரளச்செய்துள்ளார் என்றேக் கூறலாம்.
- https://m.facebook.com/story.php?story_fbid=pfbid02ev7WrkonerqJ49evcuVarseaxNLG2utNyygsjrAUsAhygoxLq2Vdg9sVQMNjCzQml&id=764377624&mibextid=9R9pXO
திரைப்படத்தில் வசனங்களில் அதிக கவனம் செலுத்தும் இயக்குநர் அல்போன்சு, தற்போது நிஜ வாழ்க்கையிலும் அவரது வார்த்தை கூர்மைகளை நிரூபித்துள்ளார் என்று நெட்டிசன்கள் கருத்தைப் பதிவு செய்து வருகின்றனர். மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு அவர் எழுதிய கடிதத்தில் கேட்டிருப்பதாவது..
"நான் அல்போன்சு புத்திரன். நான் கேரளா மாநிலத்தில் பிறந்து தமிழ்நாடு பாரம்பரியத்தில் வளர்ந்த நான் எழுத்தாளர், எடிட்டர், மற்றும் நேரம், கோல்ட், பிரேமம் போன்ற படங்களை இயற்றி இயக்குநராக பணியாற்றி வருகிறேன். உங்களிடம் கேட்பதற்கு என்னிடம் நிறையக் கேள்விகள் உண்டு. அதில், அழிவின் வழும்பில் இருக்கக்கூடிய இயக்குநர்களைக் காப்பாற்றுவதற்கான கேள்விகளில் சிலவற்றை தற்போது கேட்கிறேன்.
1. திரைப்பட இயக்குநர்களுக்கு வங்கிக்கடன் வழங்க ரிசர்வ் பேங்க் ஆஃப் இந்தியா மறுப்பதற்கான காரணம் என்ன? உலகின் உயரிய விருதாகக் கருதப்படும் ஆஸ்கர் வென்ற திரைப்படங்களான RRR போன்ற திரைப்படங்கள் ஆயிரம் கோடி வசூலை ஈட்டி சாதனை புரிந்துள்ளது.
இத்தகைய பெரிய பட்ஜெட் படம் தயாரிப்பதற்கான மூலதனம் யாரிடமிருந்து பெறப்படுகிறது. 500கோடி மதிப்பில் படங்களைத் தயாரிப்பதற்கு யார் பணம் கொடுத்தார்கள், எங்கிருந்து இந்த 500 கோடி பெறப்பட்டது, எப்படி தயாரிப்பாளர்கள் இத்தனை பெரிய தொகையைப் பெற்றார்கள். மேலும் எந்த வங்கிகளும் இயக்குநர்களுக்கு கடன் அளிக்க முன்வராத நிலையில், எந்த வங்கி இவர்களுக்கு இந்தப் பணத்தை அளித்தது. அப்படி இவர்கள் படத்திற்காக 500கோடி பணத்தையும் செலவழித்துவிட்டார்கள் என்றால், இதனை நீங்கள் எந்த அடிப்படையில் கண்டுகொள்ளாமல் இருந்தீர்கள்?
2. சூதாட்டம் சட்டவிரோதம் என்ற நிலையில், எதன் அடிப்படையில் feature films டெக்னீஷியன்ஸ் மற்றும் அதனைச் சார்ந்த 24துறை டெக்னீஷியன்கள் சூதாட்டப்பிரிவோடு சமன்படுத்தப்படுகிறார்கள்?. நாளை நான் உங்களைச் சந்திக்கும் போது, இந்தியாவின் மூத்த அக்கோண்டண்ட்(கணக்காளர்) என்று கூறினால் நீங்கள் அதனைத் தவறாக எடுத்துக் கொள்ளக்கூடாது.(சமீபத்தில் சூதாட்டம் மற்றும் கேளிக்கைக்கும் ஒரே அளவிலான ஜிஎஸ்டி - 25% விதிக்கப்பட்டிருப்பதைச் சுட்டிக்காட்டும் விதத்தில் இயக்குநரின் கேள்வி அமைந்துள்ளது)
3. அப்படி சினிமா டெக்கினிஷியன்ஸ்கள்(மத்திய அரசின் சட்டத்திருத்தங்கள் படி குறிப்பிடப்பட்ட 24 துறை டெக்னீஷியன்கள்) குறித்துப் பேசுவது அபத்தம் மற்றும் அநாகரிகம் என்று நீங்கள் நினைத்தால், இந்த விதிகளை உருவாக்கியவர்களிடம் எங்களின் முன்பிருந்த பெயர்களையே (உரிமை) திரும்பப்பெறச் செய்யுங்கள். நாங்கள் அனைவரும் கலைஞர்கள். இந்தக் கருத்தை இதற்கு முன்னதாக யாரும் உங்களிடம் சொல்லாமலிருந்தால் நான் உங்களிடம் சொல்கிறேன் அந்தக் கலைஞர்களில் நானும் ஒருவன். நம் இருவருக்கும் தெரிந்த மொழியில் சொல்ல வேண்டுமென்றால் நாங்கள் 'கலைஞர்கள்'.
4. அழுத குழந்தைக்குத் தான் பால் என்று கூறுவது தான் வழக்கம். ஆனால் அரசின் நிராகரிப்பினாலும், மூர்கத்தனத்தினாலும் அழமால் இருக்கும் குழந்தையின் நிலை என்ன? சமீபத்தில் HUM திரைப்படத்திற்காக நடிகர் ரஜினிகாந்த் மற்றும் அமிதாப் பச்சன் இணைந்த புகைப்படத்தைப் பார்த்தபோது, 4ஆம் வகுப்பில் எனக்கு நேர்ந்த சம்பவம் ஒன்று நினைவுக்கு வந்தது. கணினி கற்பதற்கும் கிரிக்கெட், கால்பந்து, ஹாக்கி போன்ற விளையாட்டுகளை விளையாடுவதற்கு மட்டும் லாரன்ஸ் லவ்டேல் பள்ளிக்குச் சென்ற நான், என்னுடைய உயர்கல்வி ஆசிரியர் அடித்தபோது கூட அழாத சம்பவம் தற்போது நினைவுக்கு வந்தது.
அந்த சம்பவத்தில் எனக்கு எலும்பு முறிவு ஏற்பட்டது தற்போது தான் என் பெற்றோருக்கே தெரிந்தது. தற்போது இது குறித்து உங்களால் நடவடிக்கை எடுக்க முடியாது என்று எனக்குத் தெரியும் அதற்காக நான் இந்தக் கேள்வியை இங்குப் பதிவு செய்யவில்லை. காலங்கள் மாறினாலும் தற்போது வரை என்னைப் போன்ற வாய் திறக்கா மாணவர்கள் பல்வேறு துன்பங்கள் மற்றும் அவமானங்களைச் சந்தித்து வருகின்றனர்.
அப்படி துயரத்தில் இருக்கும் மாணவர்களைக் காப்பாற்றுவதற்கு அனைத்துப் பள்ளிகளிலும், சிசிடிவி கேமராக்களை அறிமுகப்படுத்த வேண்டும். எனக்கு நேர்ந்த சம்பவம் என் குடும்பத்திற்கு மிகுந்த வேதனை அளிக்குமென்று எனக்குத் தெரியும். இருந்தும் இதனை நான் கூறுவதற்கான காரணம், துயரத்தில் இருக்கும் மாணவர்களுக்கு உதவ வேண்டும். இந்த நான்காவது கேள்வி என்னுடைய கேள்வி இல்லை. இது என்னுடைய வேண்டுகோளாகக் கருதி நிறைவேற்ற வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.
முன்னதாக கேட்கப்பட்ட 3கேள்விகள் மட்டுமே உங்களுடைய அதிகாரம் பயன்படும் என்று எனக்குத் தெரியும் ஆனால் என் 4வது வேண்டுகோளை அரசின் அசோக சக்ராவில் இருக்கும் நான்காவது சிங்கத்தைப் போன்று கருதி நிறைவேற்ற வேண்டிக்கேட்டுக்கொள்கிறேன். மேலும் உங்கள் மீதான நம்பிக்கை மற்றும் உங்கள் செயல்பாடுகளின் ரசிகனாக இந்தக்கடிதத்தை உங்களுக்கு எழுதியுள்ளேன். எனது ஒவ்வொரு கேள்வியின் ஆழம் புரிந்து நடவடிக்கை எடுப்பீர்கள் என்று நம்புகிறேன்" எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க: திரைத்துறையினர் சார்பில் கலைஞர் நூற்றாண்டு விழா.. சென்னையில் நடைபெற்ற பூமி பூஜை..!