ஹைதராபாத்: நாடு முழுவதும் இன்று(நவ.1) முதல் டிஜிட்டல் நாணயத்தை ரிசர்வ் வங்கி அறிமுகம் செய்துள்ளது. சோதனை முயற்சியாக மொத்த விற்பனையில் இந்த டிஜிட்டல் கரன்சி அறிமுகப்படுத்தப்பட்டுள்ள நிலையில், அடுத்த மாதம் சில்லறை வர்த்தகத்திலும் இதைக் கொண்டு வர ரிசர்வ் வங்கி திட்டமிட்டுள்ளது. இந்த நிலையில், டிஜிட்டல் கரன்சி தொடர்பான சில முக்கிய தகவல்களைப் பார்க்கலாம்...
- டிஜிட்டல் கரன்சி என்பது நாம் பயன்படுத்தும் ரூபாய் நோட்டுகளின் டிஜிட்டல் வடிவம் என்று கூறலாம்.
- ரூபாய் நோட்டுகளைப் போலவே, டிஜிட்டல் கரன்சிகளையும் ரிசர்வ் வங்கி தனது முழு கட்டுப்பாட்டில் வைத்துள்ளது. டிஜிட்டல் கரன்சியை அச்சிடுதல், வெளியிடுதல், விநியோகம் அனைத்தும் ஆர்பிஐ கட்டுப்பாட்டில் வரும்.
- ரிசர்வ் வங்கியின் கட்டுப்பாட்டில் இருப்பதால், அதன் நம்பகத்தன்மையில் எந்த பிரச்சினையும் இருக்காது.
- டிஜிட்டல் கரன்சியை பயன்படுத்தி ஒரு பொருளை வாங்கும்போது, ஒரே சொடுக்கில் பணத்தை விற்பனையாளருக்கு மாற்றலாம்.
- டிஜிட்டல் கரன்சி பரிமாற்றங்கள் ஏற்கனவே இருக்கும் டிஜிட்டல் ஆப் பேமெண்ட்களில் இருந்து வேறுபட்டவை. டிஜிட்டல் கரன்சி பரிவர்த்தனைக்கு வங்கி கணக்கு அல்லது இணையம் தேவையில்லை.
- டிஜிட்டல் கரன்சியை எந்த கட்டணமும் இல்லாமல், ரூபாய் நோட்டுகளாக மாற்றிக் கொள்ளலாம். அதேபோல், ரூபாய் நோட்டுகளையும் இலவசமாக டிஜிட்டல் கரன்சியாக மாற்றலாம்.
- கிரிப்டோகரன்சி, பிட்காயின் போன்றவற்றிற்கு எந்தவித பாதுகாப்பும் இல்லை. ஆனால், டிஜிட்டல் கரன்சி ரிசர்வ் வங்கியின் ஒழுங்குமுறை கட்டுப்பாட்டில் இருப்பதால், அதில் எந்தவித ஆபத்தும் இல்லை. பணம் பாதுகாப்பாக இருக்கும்.
- டிஜிட்டல் கரன்சி, வங்கிக் கணக்குடனும், வங்கிக் கணக்கு இல்லாமலும் என இரண்டு முறைகளில் செயல்படுகிறது.
- தனிநபர்கள் மற்றும் நிறுவனங்களுக்கு இடையேயான பரிவர்த்தனைகளுக்கு வங்கிக் கணக்கு தேவையில்லை. நிதி நிறுவனங்களுக்கு இடையிலான பரிவர்த்தனை வங்கிக் கணக்கு மூலமாகவே நடைபெறும்.
- நாணயங்கள், ரூபாய் நோட்டுகள் அச்சிடுவதற்கும், விநியோகிப்பதற்கும் தற்போது அரசு செலவு செய்யும் ஆயிரக்கணக்கான கோடிகளை இந்த டிஜிட்டல் கரன்சி மிச்சப்படுத்துகிறது.
- டிஜிட்டல் கரன்சியில் வெளிப்படைத் தன்மை உள்ளது. இணைய வசதி அல்லது மின்சாரம் இல்லாமல் நாடு முழுவதும் பரிவர்த்தனைகளை செய்யலாம்.
- கள்ள நோட்டுகள் புழக்கத்தை தடுத்து, வெளிநாடுகளுக்கும் கூட எளிதாக நிதி பரிவர்த்தனைகளை செய்யலாம்.
இதையும் படிங்க:கிரெடிட் கார்டுகளை பயன்படுத்துவதற்கான சில ஸ்மார்ட் டிப்ஸ்!