அமராவாதி: ரெமோ திரைப்படத்தில் தன் காதலுக்காக சிவகார்த்திகேயன் செவிலி வேடம் அணிவார். அவ்வை சண்முகி திரைப்படத்தில் தன் காதல் மனைவிக்காக கமல் ஹாசன் மாமி வேடம் அணிந்து நடித்திருப்பார்.
இப்படி திருமணத்திற்கு முன்பும், பின்பும் ஆண்மகன் பெண் வேடம் அணிந்த கதையை பார்த்திருப்போம். ஆனால் திருமணத்தின் போது மணமகன் பெண் உடையும் மணமகள் ஆண் உடையும் அணிந்து வினோதமான முறையில் திருமணம் செய்து கொள்வதை கேள்விப் பட்டிருப்பீர்களா?
ஆந்திர மாநிலம் பிரகாசம் மாவட்டத்தில் உள்ள பீச்செர்லப்பள்ளிகிராமத்தில் வசிக்கும் கும்மா குடும்பத்தினரைச் சேர்ந்த மணமக்கள் அங்கய்யா, அருணாவிற்கு சமீபத்தில் திருமணம் நடைபெற்றது.
மணமகள் ஆணை போன்று கூர்தா அணிந்தும், மணமகன் புடவை அணிந்தும் அவர்களின் பாரம்பரிய வழக்கப்படி திருமணம் செய்து கொண்டனர். தொடர்ந்து மணமக்கள் இருவரும் திருமண சடங்கின் ஒருபகுதியாக கிராம தேவதைகளான அங்கலம்மா, போலராம்மா கோயில்களுக்கு ஊர்வலமாக அழைத்து செல்லப்பட்டனர்.
அங்குள்ள வன்னி மரத்திற்கும், நாக புற்றுக்கும் பூஜை செய்து வழிபாடு நடத்தினர். தற்போது இவர்களின் திருமண வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.
இதையும் படிங்க: 'ஒரே மேடை.. இரு காதலிகளுடன் திருமணம்..' - சாமர்த்தியசாலியான 90’ஸ் கிட்ஸ்