ETV Bharat / bharat

மாற்றுத்திறனாளி சிறுவனுக்கு அனுமதி மறுப்பு; இண்டிகோ நிறுவனத்திற்கு ரூ.5 லட்சம் அபராதம் விதிப்பு! - Ranchi Airport

மாற்றுத்திறனாளி சிறுவனை விமானத்தில் பயணிக்க மறுப்பு தெரிவித்த இண்டிகோ ஏர்லைன் நிறுவனத்திற்கு ரூ.5 லட்சம் அபராதமாக விதிக்கப்பட்டுள்ளது.

இண்டிகோ நிறுவனத்திற்கு ரூ.5 லட்சம் அபராதம் விதிப்பு!

author img

By

Published : May 28, 2022, 6:26 PM IST

டெல்லி: மே 7 ஆம் தேதி ராஞ்சி விமான நிலையத்திலிருந்து ஹைதராபாத்திற்கு செல்ல மாற்றுத்திறனாளி குழந்தையுடன் ஒரு குடும்பத்தினர் வந்திருந்தனர். இவர்கள் இண்டிகோ விமானத்தில் பயணம் செய்யவிருந்த நிலையில், குழந்தையின் உடல்நிலையை கருத்தில்கொண்டு, குழந்தையை விமானத்தில் ஏற்றுவதற்கு விமான ஊழியர்கள் மறுப்பு தெரிவித்தனர். இதனால், பெற்றோரும் அதில் பயணிக்கவில்லை.

இதற்கிடையில், இதுகுறித்த வீடியோ சமூக வலைதளங்களில் காட்டுத்தீயாக பரவியது. இதனைக்கண்ட வலைதளவாசிகள் உள்பட பலரும், இண்டிகோ விமான நிறுவனத்திற்கு தங்களது கடும் கண்டனத்தை தெரிவித்தனர். இதனையடுத்து, டிஜிசிஏ (DGCA) எனப்படும் விமானப் போக்குவரத்து ஒழுங்குமுறை ஆணையம், இதுகுறித்து விசாரிக்க 3 பேர் கொண்ட குழுவை அமைத்தது.

இக்குழுவின் விசாரணைக்கு பதிலளித்த இண்டிகோ நிறுவனம், ‘குழந்தை உடல்நிலை சரியில்லாமல் இருந்ததால் விமானத்தில் பயணிக்க முடியவில்லை. இதனால், அந்த குழந்தையின் பெற்றோரும் விமானத்தில் ஏற வேண்டாம் என முடிவு செய்தனர்’ எனத் தெரிவித்தது. இண்டிகோவின் இந்த பதில் திருப்திகரமாக இல்லாததால், டிஜிசிஏ இண்டிகோ நிறுவனத்திற்கு அபராதம் விதித்துள்ளது.

இதனடிப்படையில், ‘இக்கட்டான சூழ்நிலைகள் சாத்தியமில்லாத பதில்களுக்கு தகுதி பெற்றவை. ஆனால், விமான ஊழியர்கள் சந்தர்ப்பத்திற்கு ஏற்றவாறு நடந்து கொள்ள தவறிவிட்டனர். மேலும், சிவில் விமானப் போக்குவரத்து விதிமுறைகளுக்கு புறம்பாகவும் செயல்பட்டுள்ளனர் என்பது உறுதியாகியுள்ளது.

அதேநேரம், இரக்கமாக நடந்துகொண்டு, குழந்தைய அமைதிப்படுத்தி இருந்தால், இந்த ஒழுங்குமுறை நடவடிக்கையை தவிர்த்திருக்கலாம். இப்படியான அனைத்து தரவுகளையும் கொண்டு, இண்டிகோ நிறுவனத்திற்கு ரூ.5 லட்சம் அபராதம் விதிக்கப்படுகிறது” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: இ- காமர்ஸ் தளங்களில் போலி மதிப்புரைகளை கண்காணிக்க நடவடிக்கை - மத்திய அரசு!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.