பந்தி சோர் திவஸ் என்பது முகலாயர் காலத்தில் குவாலியர் கோட்டையில் இருந்து சீக்கிய மதகுரு ஹர்கோபிந்த் சாஹிப் விடுவிக்கப்பட்ட தினமாகும்.
இன்று (நவ.14) நாடு முழுவதும் இந்துக்களின் பண்டிகையான தீபாவளியும், சீக்கியர்களின் விழாவான பந்தி சோர் திவஸும் கொண்டாடப்பட்டுவரும் நிலையில், இந்த இரண்டையும் கொண்டாடும் விதமாக ஏராளமான பக்தர்கள் இன்று காலை முதல் அம்ரிஸ்டரில் உள்ள பொற்கோயிலுக்கு வருகை தந்த வண்ணம் உள்ளனர்.
”நான் பிரார்த்தனை செய்து என்னுடைய நன்றியைத் தெரிவிப்பதற்காக இன்று பொற்கோயிலுக்கு வந்துள்ளேன். சரோவர் புனித நீரிலும் நீராடினேன். இன்று கொண்டாடப்பட்டு வரும் தீபாவளிப் பண்டிகையும், பந்தி சோர் திவஸும் நாடு முழுவதும் உற்சாகத்தையும் வெளிச்சத்தையும் பரப்புவதை எதிர்நோக்கி உள்ளோம்” எனப் பொற்கோயிலுக்கு வருகை தந்த பக்தர் ஒருவர் தெரிவித்தார்.
முன்னதாக பஞ்சாப் மாநில மக்களுக்கும், நாடு முழுவதும் உள்ள அனைத்து மக்களுக்கும் முதலமைச்சர் அமரீந்தேர் சிங் தீபாவளி மற்றும் பந்தி சோர் திவஸ் வாழ்த்துக்களை தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.