ETV Bharat / bharat

ஐஎஸ்ஐ அமைப்புக்காக ராணுவத்தை உளவு பார்த்த இளைஞருக்கு 5 ஆண்டுகள் சிறை!

இந்திய ராணுவம் குறித்த முக்கிய தகவல்களை உளவுபார்த்து ஐஎஸ்ஐ பயங்கரவாத அமைப்புக்கு வழங்கிய குற்றத்திற்காக, உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த இளைஞருக்கு ஐந்து ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது.

ATS court
ATS court
author img

By

Published : Jul 4, 2022, 4:53 PM IST

லக்னோ: உத்தரபிரதேச மாநிலம் அயோத்தியை சேர்ந்த அஃப்தாப் அலி என்பவர், தனது உறவினர்களை காண பாகிஸ்தான் செல்ல பலமுறை முயற்சித்தும், விசா கிடைக்கவில்லை. அப்போது ஐஎஸ்ஐ பயங்கரவாத அமைப்பு மூலம் அவருக்கு உதவி கிடைத்துள்ளது.

அவர்கள் விசா கிடைக்க உதவியுள்ளனர். அதற்கு பதிலாக அயோத்தியா கன்டோன்மென்ட்டை புகைப்படம் எடுத்து அனுப்ப கூறியுள்ளனர். அதன்படி அஃப்தாப் அலி அனுப்பியுள்ளார். அலி பாகிஸ்தான் சென்றதும் அவருக்கு மேலும் பல உதவிகளை செய்துள்ளனர். பிறகு அலி, ஐஎஸ்ஐ பயங்கரவாத அமைப்புக்கு உளவாளியாக மாறியுள்ளார். 2014ஆம் ஆண்டு முதல் 2017ஆம் ஆண்டு வரை, லக்னோ மற்றும் அயோத்தியில் பாதுகாப்புப் படைகளின் நடமாட்டம் மற்றும் ராணுவம் குறித்த பல்வேறு முக்கிய விவரங்களை வாட்ஸ்அப் மற்றும் மின்னஞ்சல் மூலம் அலி ஐஎஸ்ஐயுடன் பகிர்ந்துள்ளார்.

இதற்காக அலிக்கு பணம் வழங்கப்பட்டுள்ளது. இதையடுத்து கடந்த 2017ஆம் ஆண்டு மார்ச் மாதம் அஃப்தாப் அலி கைது செய்யப்பட்டார். அவர் மீது சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்பு சட்டம் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

இதுதொடர்பான வழக்கு உத்தரபிரதேசத்தில் உள்ள சிறப்பு என்ஐஏ-ஏடிஎஸ் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த நிலையில், அலி தன் மீதான குற்றங்களை ஒப்புக் கொண்டதால், அவருக்கு ஐந்து ஆண்டுகள் மற்றும் மூன்று மாதங்கள் சிறை தண்டணையும், 4 ஆயிரத்து 800 ரூபாய் அபராதமும் விதித்து சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

இதையும் படிங்க:"அது எப்படி என்னை பார்த்து குரைக்கலாம்"... நாயுடன் உரிமையாளர் குடும்பத்தையே இரும்பு கம்பியால் தாக்கிய இளைஞர்...

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.