ETV Bharat / bharat

'உத்தரகாண்ட் ஹரித்வார் கும்பமேளா அடுத்தாண்டு நடைபெறும்'- திரிவேந்திரசிங் ராவத்

author img

By

Published : Nov 23, 2020, 8:49 AM IST

கோவிட்-19 சவால்களுக்கு மத்தியில் உத்தரகாண்ட் மாநிலம் ஹரித்வார் நகரில் திட்டமிட்டப்படி அடுத்த ஆண்டு கும்பமேளா விழா நடைபெறும் என அம்மாநில முதலமைச்சர் திரிவேந்திரசிங் ராவத் கூறினார். ஹரித்வார் கும்பமேளா விழாவில் 50 லட்சம் பக்தர்கள் வரை கலந்துகொள்ள வாய்ப்புள்ளது.

ஹரித்வார் குடமுழுக்கு
ஹரித்வார் குடமுழுக்கு

டேராடூன்: கரோனா அச்சுறுத்தல் காரணமாக நாடு முழுவதும் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. மத்திய அரசு ஊரங்கு தளர்வுகளை அறிவித்தாலும் மக்கள் அதிகம் கூடும் நிகழ்ச்சிகளுக்கு தமிழ்நாடு, மகாராஷ்டிரா உள்ளிட்ட மாநில அரசுகள் தடைவிதித்து வருகின்றன.

இந்நிலையில், உத்தரகாண்ட் மாநிலம் ஹரித்வாரில் கும்பமேளா அடுத்த ஆண்டு நிச்சயம் நடைபெறும் என அம்மாநில முதலமைச்சர் திரிவேந்திரசிங் ராவத் தெரிவித்துள்ளார். கரோனா அச்சுறுத்தல் இருந்தாலும், உரிய பாதுகாப்பு நடவடிக்கைகளுடன் கும்பமேளா நடைபெறும் என அவர் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் மேலும் கூறுகையில், "கும்பமேளாவின் போது முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து ஆய்வு நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது. பக்தர்கள் பாதுகாப்புடன் பங்கேற்கும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்படும்" என்றார்.

கும்பமேளா விழா அலுவலர் தீபக் ராவத் கூறுகையில், "விழா ஏற்பாடு டிசம்பர் 15ஆம் தேதிக்குள் நிறைவடையும். கும்பமேளா விழாவையொட்டி கங்கை நதியில் அமைக்கப்பட்டுள்ள ஒன்பது படித்துறை, எட்டு பாலங்கள் மற்றும் சாலைப் பணிகள் நிறைவடைந்துள்ளன. விழாவில் பங்கேற்கும் பக்தர்களுக்கு குடிநீர் வசதி, பார்க்கிங் வசதி ஆகியவை வழங்குவதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன" என்றார்.

2021ஆம் ஆண்டு நடைபெறும் இந்த ஹரித்வார் கும்பமேளா விழாவில் 35 முதல் 50 லட்சம் வரையிலான பக்தர்கள் பங்கேற்பார்கள் என மற்றொரு அலுவலர் தெரிவித்தார்.

இதையும் படிங்க: தெலங்கானா கும்பமேளா: களைக்கட்டும் ஆதிவாசி பண்டிகை!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.