ஹைதராபாத்: இந்திய மாணவர்கள் அமொிக்காவில் படிப்பதற்கு சீட் மற்றும் விசா கிடைத்த மகிழ்ச்சியில் அமெரிக்காவிற்கு பறந்து செல்கின்றனர். அவ்வாறு பறந்து செல்லும் இந்திய மாணவர்களுக்கு அமெரிக்காவின் குடியேற்றத்துறை அதிகாரிகள் ஷாக் கொடுத்து வருகின்றனர். இந்திய மாணவர்களில் சிலரை அமெரிக்க குடியேற்றத்துறை அதிகாரிகள்,அம்மாணவர்களின் சமூக வலைதள பக்கங்களின் பதிவுகள் மற்றும் வங்கிப் பரிவர்த்தனைகள் வைத்து மீண்டும் இந்தியாவிற்கு திருப்பி அனுப்பி விடுகின்றனர். இவ்வாறாக கடந்த சில மாதங்களில் 500க்கும் மேற்பட்ட இந்திய மாணவர்கள் திருப்பி அனுப்பப்பட்டு உள்ளனர். தற்போது இந்த கல்வியாண்டில், மாணவர்கள் ஆகஸ்ட் மற்றும் செப்டம்பர் மாதங்களில் அதிகப்படியாக அமெரிக்காவிற்கு செல்லும் இந்த நேரத்தில் அமெரிக்காவின் குடியேற்றத்துறை அதிகாரிகள் மாணவர்களை திருப்பி அனுப்பும் சம்பவம் பெற்றோர்கள் இடையே கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. விசா என்பது அமெரிக்காவில் தங்குவதற்கான சான்று இல்லை மேலும் மாணவர்கள் தவறான விபரங்களை சமர்ப்பித்தால் உடனடியாக இந்தியாவிற்கு திருப்பி அனுப்பப்படுவார்கள் என்று அமெரிக்க தூதரக வட்டாரங்கள் தொிவிக்கின்றன.
இந்திய மாணவர்கள் அமெரிக்காவில் இருந்து திருப்பி அனுப்பப்டுவதற்கான காரணங்கள் என்ன? : குறைந்தபட்ச ஆங்கிலம் தொிந்து இருக்க வேண்டும்: அமெரிக்க விமான நிலையங்களில் இறங்கும் மாணவர்களின் F1 விசாக்கள் மற்றும் போர்டிங் பாஸ்கள் குடியேற்றத்துறை அதிகாரிகளால் சரிபார்க்கப்படும். இது போர்ட் ஆஃப் என்ட்ரி ("Port of Entry") என்று அழைக்கப்படுகிறது. அப்போது குடியேற்றத்துறை அதிகாரிகள் சில மாணவர்களிடம் எந்த பல்கலைக்கழகத்தில் சேரப் போகிறீர்கள்? எந்த படிப்பில் சேர போகிறீர்கள்? எங்கு தங்க உள்ளீர்கள்? போன்ற எளிய கேள்விகளுக்கு ஆங்கிலத்தில் சரியாக பதிலளிக்க முடியவில்லை என்றால் மாணவர்கள் இந்தியாவிற்கு திருப்பி அனுப்பப்படுவார்கள் என அமெரிக்க துணைத் தூதரக வட்டாரங்கள் கூறுகின்றன. இவ்வாறு திருப்பி அனுப்பப்பட்டவர்களில் பாதி பேருக்கு ஆங்கிலத்தில் அடிப்படை அறிவு இல்லாமல் இருப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது. ஆங்கிலத்தில் பதிலளிக்க முடியாவிட்டால், GRE மற்றும் TOEFL மதிப்பெண்கள் பரிசீலிக்கப்படும் எனவும் தொிவிக்கப்பட்டு உள்ளது.
கலிபோர்னியாவில் எம்.எஸ் நான்காம் ஆண்டு படிக்கும் மாணவர் கூறும்போது: இந்தியாவில் இருந்து வரும் சில மாணவர்களை அமெரிக்க குடியேற்றத் துறை அதிகாரிகள் தனி அறையில் அமர வைத்து செல்போன், லேப்டாப் மற்றும் சான்றிதழ்களை ஆய்வு செய்வார்கள். மேலும் சான்றிதழ்கள் உண்மையானதா? இல்லை போலியானவையா? என்று மிரட்டும் படி கேள்வி கேட்கப்படும் அப்போது மாணவர்கள் பதில் கூற நிலை தடுமாறினாலும் திருப்பி இந்தியாவிற்கு அனுப்பபடுகின்றனர் என தொிவித்தார்.
சமூக வலைதள பதிவுகள் மற்றும் குறுஞ்செய்திகளால் திருப்பி அனுப்படும் இந்திய மாணவர்கள்:
வாட்ஸ்அப், ஃபேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் போன்ற சமூக வலைதள பதிவுகள் மற்றும் மின்னஞ்சல்கள், தற்போது நூற்றுக்கணக்கான மாணவர்கள் அமெரிக்காவிற்குள் நுழைவதற்கு மிகப்பெரிய தடையாக மாறி வருகிறது. அமெரிக்க குடியேற்றத்துறை அதிகாரிகள் மாணவர்களின் சமூக வலைதளங்களில் உள்ள பதிவுகள் மற்றும் குறுஞ்செய்திகளை ஆய்வு செய்கின்றனர். உதாரணமாக, நான் முதல் நாளிலிருந்து பகுதி நேர வேலையைச் செய்யலாமா? கட்டணத்திற்குத் தேவையான பணத்தை வங்கிக் கணக்கில் காட்டுவது எப்படி? அதற்கு கன்சல்டன்சிகளுக்கு எவ்வளவு பணம் கொடுக்க வேண்டும்? இதுபோன்ற விஷயங்களைப் பற்றி நண்பர்களுடன் உரையாடல்கள் இருந்தாலும், வெறுக்கத்தக்க பதிவுகள் இருந்தாலும் மாணவர்கள் இந்தியாவிற்கு திருப்பி அனுப்பப்படுகின்றனர். என நிபுணர்கள் தொிவிக்கின்றனர்.
வரலாறு காணாத அளவில் இந்த ஆண்டு இந்திய மாணவர்கள் அமெரிக்காவில் படிக்க உள்ளனர். கடந்த ஆண்டு 1.90 லட்சம் பேர் சென்ற நிலையில், இந்தாண்டு ஜனவரி முதல் ஜூன் குறைந்த பயணிகள் செல்லும் நேரத்திலேயே 91 ஆயிரம் இந்தியர்கள் அமெரிக்காவிற்கு சென்றுள்ளனர். தற்போது ஆகஸ்ட் மற்றும் செப்டம்பர் வரை அதிக பயணிகள் செல்லும் நேரம் என்பதால் 2.50 லட்சம் முதல் 2.70 லட்சம் இந்தியர்கள் அமெரிக்காவிற்கு செல்வார்கள் என எதிர்பாா்க்கப்படுகிறது.
ஹைதராபாத்தை சேர்ந்த கன்சல்டன்சி மேலாளர் வெங்கட ராகவரெட்டி கூறும்போது: தெலுங்கானா மாநிலத்திலிருந்து மாணவர்கள் ஏராளமானோர் அமெரிக்காவிற்கு செல்கின்றனர். தவறான சான்றிதழ்களை எடுத்து சென்றதாக, தற்போது 21 மாணவர்கள் ஒரே நேரத்தில் திருப்பி அனுப்பட்டதாகவும், ஒவ்வொரு ஆண்டும் 200 மாணவர்கள் குடியேற்ற துறை அதிகாரிகளின் சான்றிதழ் சோதனையில் சிக்கி திருப்பி அனுப்படுவதாகவும், இந்த வருடம் மட்டும் இதுவரை 500 இந்திய மாணவர்கள் திருப்பி அனுப்பபட்டதாக தெரியவருகிறது என கூறினார்.
அமெரிக்க துணை தூதரக அதிகாரிகள் தெரிவிக்கும் போது: விசாவிற்கு சமர்ப்பிக்கும் ஆவணங்கள் உண்மைத்தன்மை கொண்டவை என மாணவர்களால் சான்றளிக்கப்பட வேண்டும். பின் ஆவணங்களில் தவறு இருக்கும் பட்சத்தில் மாணவர்கள் திருப்பி அனுப்பபடுவார்கள் என தெரிவித்தார்.
அமெரிக்கா அல்லது பிற நாடுகளுக்குச் செல்லும் மாணவர்கள் போதுமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று நிபுணர்கள் மற்றும் அமெரிக்க துணைத் தூதரக வட்டாரங்கள் தெரிவிக்கின்றனர்.
- விசா எடுக்கும் போது தவறான ஆவணங்களை சமர்ப்பிக்கக் கூடாது.
- படிப்பிற்காக செல்லும் மாணவர்கள் அமெரிக்காவில் சட்டவிரோதமாக வேலை செய்வது குறித்தும் சமூக வலைதளங்களில் கருத்துகளை பரிமாறக் கூடாது.
- சமூக வலைதளங்களில் வெறுப்பு மற்றும் ஆத்திரமூட்டும் பதிவுகளை வெளியிடக்கூடாது.
- நீங்கள் படிக்கும் பல்கலைக்கழகம் மற்றும் படிப்பு பற்றிய முழு விவரங்களையும் தெரிந்து இருக்க வேண்டும்.
- படிக்கும் போது எங்கே, யாருடன் தங்க உள்ளீர்கள் போன்ற விபரம் தெளிவாக தொிந்து வைத்து இருக்க வேண்டும்.
- கல்விக் கட்டணம் மற்றும் இதர செலவுகளுக்குத் தேவையான பணம் எப்படி கிடைத்தது போன்ற விபரங்கள் தொிந்து இருக்க வேண்டும்?
- வங்கிக் கடன் வாங்கினால்.. அந்த ஆவணங்களை சரியாக வைத்து இருக்க வேண்டும்.
- I-20க்கான விவரங்களை முழுவதுமாக கன்சல்டன்சிகளை நம்புவதற்குப் பதிலாக மாணவர்களே நிரப்ப வேண்டும். அவ்வாறு நிரப்பும் போது மாணவர்களுக்கு வெளிநாடு சென்று படிப்பதற்கான விழிப்புணர்வை ஏற்படுத்தும் என கூறுகின்றனர்.
இதையும் படிங்க: ஜெர்மனி சிறப்பு ஒலிம்பிக் போட்டியில் சாதனை படைத்த மதுரை மாணவர்கள்!