ETV Bharat / bharat

வீடியோ: பிகாரில் ஓடும் ரயிலில் தீ விபத்து

author img

By

Published : Jul 3, 2022, 3:32 PM IST

பிகார் மாநிலத்தில் ஓடும் ரயிலின் இன்ஜின் பெட்டியில் தீ பிடித்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.

Bihar: DEMU train engine caught fire in Motihari

பாட்னா: பிகார் மாநிலம் மோதிஹரியில் உள்ள பெல்வா ரயில் நிலையம் அருகே இன்று (ஜூலை 3) டெமு ரயிலின் (05541) இன்ஜின் பெட்டியில் திடீரென தீ பிடித்தது. இதுகுறித்து தகவலறிந்த ரயில்வே போலீசார் தீயணைப்புத்துறை அலுவலர்களுடன் சம்பவயிடத்திற்கு விரைந்து தீயை போராடி அணைத்தனர்.

ரயிலில் தீ விபத்து

இதுகுறித்து போலீசார் தரப்பில், ரக்சால்-நர்கதியாகஞ்ச் இடையே இயக்கப்படும் பயணிகள் ரயில் அதிகாலை 5:30 மணியளவில் பெல்வா ரயில் நிலையம் அருகே சென்றுக்கொண்டிருந்தபோது இன்ஜின் பெட்டியில் தீ பிடித்துள்ளது. இதனை முன்னதாகவே அறிந்த ஓட்டுநர் உடனே ரயிலை நிறுத்திவிட்டு வெளியேறினார். பயணிகளுக்கு எச்சரிக்கை விடுத்து, எங்களுக்கும் தகவல் கொடுத்தார். நாங்கள் தீயை அணைப்பதற்குள் 70 விழுக்காடு பெட்டி எரிந்து நாசமானது. இந்த விபத்தில் உயிரிழப்புகள், படுகாயங்கள் பதிவாகவில்லை. வேறு இன்ஜினை பெட்டியை வரவழைத்து ரயில் மீண்டும் இயக்கப்பட்டது. தீக்கான காரணம் குறித்து விசாரணையை தொடங்கியுள்ளோம்" எனத் தெரிவித்தனர்.

இதையும் படிங்க:

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.