ETV Bharat / state

சென்னை அரசு மருத்துவரை கத்தியால் குத்திய இளைஞருக்கு 15 நாட்கள் நீதிமன்ற காவல்! - GUINDY DOCTOR CASE

கிண்டியில் உள்ள அரசு பல்நோக்கு சிறப்பு மருத்துவமனை மருத்துவர் பாலாஜி கத்தியால் குத்தப்பட்ட சம்பவத்தில் கைதான நபர் மீது உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று சென்னை காவல் ஆணையர் அருண் தெரிவித்துள்ளார்.

பாதிக்கப்பட்ட மருத்துவர் பாலாஜி, சென்னை மாநகர காவல் ஆணையர் அருண்
பாதிக்கப்பட்ட மருத்துவர் பாலாஜி, சென்னை மாநகர காவல் ஆணையர் அருண் (Credits - ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Nov 13, 2024, 6:39 PM IST

Updated : Nov 13, 2024, 8:46 PM IST

சென்னை: சென்னை கிண்டியில் கலைஞர் நூற்றாண்டு அரசு பல்நோக்கு சிறப்பு மருத்துவமனை செயல்பட்டு வருகிறது. இம்மருத்துவமனையில் இன்று (நவ 13) காலை புற்றுநோய் சிகிச்சைப்பிரிவு மருத்துவர் பாலாஜி என்பவர் பணியில் இருந்த நேரத்தில், அங்கு வந்த 25 வயது மதிக்கத்தக்க இளைஞர் ஒருவர் திடீரென தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து கழுத்து உள்ளிட்ட பகுதிகளில் சரமாரியாகத் தாக்கினார்.

இதனைக் கண்ட பொதுமக்களும், செவிலியர்கள், மருத்துவமனை ஊழியர்கள் அதிர்ச்சியில் உறைந்து நின்றனர். இந்தத் தாக்குதலில் படுகாயமடைந்த மருத்துவர் பாலாஜி அங்கேயே மயங்கி விழுந்துள்ளார். உடனடியாக அவரை மீட்டு அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதித்து தீவிர சிகிச்சை அளித்து வருவதாக மருத்துவமனை இயக்குநர் பார்த்தசாரதி தெரிவித்துள்ளார்.

இச்சம்பவம் குறித்து கிண்டி காவல்துறையினருக்கு மருத்துவமனை நிர்வாகம் தரப்பில் தகவல் கொடுக்கப்பட்டது. அதனடிப்படையில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த கிண்டி போலீசார், மருத்துவரை கத்தியால் குத்திய நபரை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மருத்துவமனை வளாகத்தில் கிடந்த மருத்துவரை குத்தியை கத்தியையும் போலீசார் பறிமுதல் செய்தனர். இந்நிலையில், இச்சம்பவத்துக்கு அரசியல் கட்சி தலைவர்களான தமிழிசை செளந்தரராஜன், அண்ணாமலை, ஜி.கே.வாசன், அன்புமணி ராமதாஸ் உள்ளிட்ட பலர் தங்களது கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்.

இதையும் படிங்க : மருத்துவர் கத்திக்குத்து சம்பவம்: "இளைஞர் மீது உரிய நடவடிக்கை" - உதயநிதி ஸ்டாலின் உறுதி!

மேலும், மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வரும் மருத்துவர் பாலாஜியை அதிமுக முன்னாள் அமைச்சர்கள் சந்தித்து உடல்நலம் குறித்து கேட்டறிந்தனர். மேலும், தமிழக துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நேரில் சந்தித்து உடல்நலம் குறித்து கேட்டறிந்தார்.

இந்தநிலையில் கிண்டி மருத்துவமனையில் சென்னை மாநகர காவல் ஆணையர் அருண் கிண்டி மருத்துவமனைக்கு நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், "கைது செய்யப்பட்டுள்ள நபர் கடந்த 6 மாதமாக இம்மருத்துவமனைக்கு வந்து சென்றுள்ளார். நேற்று கூட பாதிக்கப்பட்ட மருத்துவரிடம் ஒரு மணி நேரம் பேசியுள்ளார். அதனால் இவர் புதிதாக வந்தவர் அல்ல.

கைது செய்யப்பட்ட நபரின் தாயார் கடந்த 6 மாதமாக சிகிச்சையில் இருந்துள்ளார். இந்த சம்பவம் எதிர்பாராத விதமாக நடந்துள்ளது. முதல் தகவல் அறிக்கை பதிவு செய்வது தொடர்பாக சட்ட வல்லுநர்களுடன் ஆலோசிக்கப்படும். கொலை முயற்சிக்கான தண்டனை தான் இதற்கும் கிடைக்கும்" என்று சென்னை காவல் ஆணையர் அருண் தெரிவித்தார்.

7 பிரிவின் கீழ் வழக்குப்பதிவு?: அரசு ஊழியரை பணி செய்ய விடாமல் தடுத்தல், ஒருவருக்கு மரணத்தை உண்டாக்க வேண்டும் என்ற நோக்கத்தோடு தாக்குவது, தமிழ்நாடு மருத்துவ சேவையில் ஈடுபடுபவர்களுக்கு எதிரான வன்முறை தடுக்கும் சட்டம் உள்ளிட்ட ஏழு பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.

15 நாட்கள் நீதிமன்ற காவல்: இதனிடையே,சென்னை கிண்டி கலைஞர் உயர் சிறப்பு மருத்துவமனை புற்றுநோய் மருத்துவ நிபுணர் டாக்டர் பாலாஜியை கத்தியால் குத்திய விக்னேஷிடம் விசாரணை நிறைவடைந்த நிலையில், கிண்டி போலீசார் அவரை சைதாப்பேட்டை 9வது நீதிமன்ற நீதிபதி சுப்பிரமணி முன்னிலையில் ஆஜர்படுத்தினர்

சைதாப்பேட்டை ஒன்பதாவது நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்ட விக்னேஷை 15 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார்.

ஈடிவி பாரத் தமிழ்நாடு
ஈடிவி பாரத் தமிழ்நாடு (Credits - ETV Bharat Tamil Nadu)

ஈடிவி பாரத் வாட்ஸ்அப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்

Last Updated : Nov 13, 2024, 8:46 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.