புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் கடந்த 21 வருடங்களாக 576 பேர் தினக்கூலி ஊழியர்களாக பணிபுரிந்து வருகின்றனர். 2013ஆம் ஆண்டில் இருந்து இவர்களின் ஊதியத்தில் பி.எப். பணம் பிடிக்கப்பட்டது.
ஆனால் அந்த பணம் கட்டப்படவில்லை என தெரிகிறது. பி.எப் பணம் நிலவரம் குறித்து இயக்குநரிடம் பலமுறை முறையிட்டும் இதுவரை எந்த தகவலும் இல்லை.
எனவே தினக்கூலி ஊழியர்களின் ஊதியத்தில் இருந்து பிடித்தம் செய்யப்பட்ட பி.எப் பணம் எவ்வளவு கட்டப்பட்டுள்ளது என்பதை தெளிவுபடுத்த வேண்டும்,
தீபாவளி போனஸ் வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி 500க்கும் மேற்பட்ட ஊழியர்கள் ஜிப்பர் மருத்துவமனை இயக்குநர் அலுவலகம் முன்பு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் மருத்துவமனையில் பணிகள் பாதிக்கப்பட்டது.
இதையும் படிங்க: ஆதிதிராவிடர் நலத்துறைப் பள்ளிகளுக்கு ரூ.86.70 லட்சம் நிதி ஒதுக்கீடு