உத்தரப் பிரதேசம் மாநிலம் நொய்டாவில் விதிகளை மீறி கட்டப்பட்ட 32 மாடிகள் நேற்று தகர்க்கப்பட்டன. முன்னெச்சரிக்கையாக அருகில் இருந்த குடியிருப்புகளில் வசிக்கும் 100 குடும்பத்தைச் சேர்ந்த 5000 பேர் அப்புறப்படுத்தப்பட்டனர். இந்த நிலையில் அவர்கள் மீண்டும் நேற்றிரவு அவர்கள் வீடு திரும்பியுள்ளனர்.
மாநகராட்சியின் விதிகளை மீறி கட்டப்பட்ட அபெக்ஸ் (32 மாடிகள்) மற்றும் செயனே (29 மாடிகள்) ஆகிய கட்டங்கள் நேற்று 12 வினாடிகளில் வெடிமருந்துகள் வைத்து தகர்க்கப்பட்டன. இந்த கட்டடங்கள் தகர்க்கப்படுவதற்கு முன்னதாக எமரால்டு கோர்ட் மற்றும் ஏடிஎஸ் கிராம சங்கங்களில் இருந்து 5,000-க்கும் மேற்பட்டோர் வெளியேற்றப்பட்டனர்.
இடிபாடுகள் முடிந்த பின் வீடு திரும்பிய மக்கள் தங்கள் வீடுகள் பாதுகாப்பாக உள்ளதாக தெரிவித்துள்ளனர். மேலும் ப்ளூஸ்டோன் பகுதியில் குடியிருப்பவரும், RWA உறுப்பினருமான ஆர்த்தி கொப்புலா கூறுகையில், ‘சூப்பர்டெக் சொசைட்டியில் உள்ள நான்கு கட்டங்களுக்கு இன்னும் எரிவாயு விநியோகம் கிடைக்கவில்லை’ என்றார். "நாங்கள் இரவு 9 மணிக்குத் திரும்பினோம், எங்கள் வீடுகளுக்கு எந்த சேதமும் இல்லை. எங்கள் கட்டடங்களின் அடித்தளத்தில் இருந்து துர்நாற்றம் வருகிறது. பெரும்பாலும் அங்கு வெடிபொருட்கள் இருக்கலாம்’ எனக் கூறினார்.
கட்டடங்கள் இடிக்கப்பட்ட பின் மக்கள் பாதுகாப்பாக செல்வதை உறுதிசெய்ய அங்குள்ள இடங்களில் போலீசார் குவிக்கப்பட்டனர். மேலும் இடிந்து விழுந்த கட்டடத்தை சுற்றிலும் போலீசார் தடுப்புகளை அமைத்துள்ளனர். கட்டடங்கள் வெடித்த பல மணிநேரங்களுக்குப் பின்னர், இடிக்கப்பட்ட கோபுரங்கள் அருகே மக்கள் கூடினர். மேலும் இடிபாடுகளுடன் செல்ஃபி எடுத்துக்கொண்டனர்.
இதையும் படிங்க:Video... நொய்டாவின் இரட்டைக்கோபுரங்கள் தகர்ப்பு