டெல்லி: இத்தாலியின் அகஸ்டா வெஸ்ட்லேண்ட் என்ற நிறுவனத்திடமிருந்து குடியரசுத் தலைவர், பிரதமர் உள்ளிட்ட விவிஐபி தலைவர்கள் பயணிக்க அதிநவீன ஹெலிகாப்டர்கள் வாங்க ரூ.3,600 கோடி மதிப்பில் இந்தியா ஒப்பந்தம் மேற்கொண்டது.
இந்த ஒப்பந்தத்தை பெறுவதற்கு இந்தியாவை சேர்ந்த சிலருக்கு ரூ.400 கோடி வரை கையூட்டு (லஞ்சம்) கொடுக்கப்பட்டதாக புகார்கள் எழுந்தன. இது தொடர்பாக அமலாக்கத்துறை 2016ஆம் ஆண்டு குற்ற பத்திரிகை தாக்கல் செய்தது. இந்த வழக்கில் இடைத்தரகராக செயல்பட்ட கிறிஸ்டியன் மைக்கேல், துபாயில் 2018ஆம் ஆண்டு கைது செய்யப்பட்டார்.
அவர் மீதான விசாரணை டெல்லி நீதிமன்றத்தில் தொடர்ந்து நடைபெற்றுவருகிறது. இந்நிலையில் அவருக்கு தொடர்ந்து பிணை (ஜாமின்) மறுக்கப்பட்டுவருகிறது. இதற்கிடையில், கிறிஸ்டியன் மைக்கேல் டெல்லி சிறப்பு நீதிமன்றத்தில் பிணை கோரி மனுத்தாக்கல் செய்திருந்தார். கிறிஸ்டியன் மைக்கேல், இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்தவர் ஆவார்.
இது குறித்து அவர், நீதிமன்றத்தில் தெரிவித்திருந்தார். இந்நிலையில் அவருக்கு பிணை வழங்க மறுப்பு தெரிவித்து டெல்லி சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டது. கிறிஸ்டியன் மைக்கேல் மீது அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ தரப்பிலும் வழக்குகள் பதியப்பட்டுள்ளன என்பது நினைவு கூரத்தக்கது.
இதையும் படிங்க: அகஸ்டா வெஸ்ட்லேண்ட் வழக்கு: இடைத்தரகர் கிறிஸ்டியன் டெல்லி நீதிமன்றத்தில் மனு!